பூமிக்கு அடியில் முளைத்த சிவலிங்கம். அதை எப்போதும் அபிஷேகிக்கும் அதிசய நீரூற்று

216

இந்தியாவில் உள்ள பல கோவில்களில் நாம் பலவிதமான அதிசயங்களை கண்டிருப்போம். அந்த வகையில் திரியம்பகேஸ்வரர் என்னும் சிவன் கோவிலில் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒரு நீரூற்று அதிசயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம். மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் உள்ளது திரியம்பகேஸ்வரர் கோவில்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முப்பு தோன்றிய சுயம்பு வடிவிலான மூன்று சிவலிங்கங்கள் இங்கு உள்ளன. மற்ற சிவலிங்கங்களை போல் அல்லாமல் இங்குள்ள லிங்கங்கள் தரைமட்டத்திற்கு கீழே உள்ளன.

இந்த கோவிலின் கருவறையில் தானாக ஒரு ஊற்று தோன்றி அதில் இருந்து வரும் நீர் எப்போதும் இங்குள்ள லிங்கங்களை அபிஷேகம் செய்துகொண்டே இருக்கிறது. இந்த நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என்பதெல்லாம் இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. அதே போல் இந்த நீரூற்று அபிஷேகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து நடக்கறது என்பதும் இதுவரை தெரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையை அவிழ்த்துவிட்டார் என்றும் அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக்கொன்றிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அதோடு ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முமூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் அதனாலேயே இங்கு மூன்று லிங்கங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும், அறிவியல் ரீதியாக, இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை புலப்படவில்லை. அறிவியலால் அறிய முடியாது பல ரகசியங்கள் நம் நாட்டில் பல உண்டு என்பதற்கான ஒரு சிறந்த சான்று இந்த நீரூற்று அபிஷேகம் என்றே கூறலாம்.