சிதம்பரம் நடராஜர் கோவில்… ஆருத்ரா தரிசன விழா…!!

37

*பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும், பஞ்ச சபைகளில்* *பொற்சபையாகவும் விளங்குவது கடலூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சிவாலயம்* *தில்லையம்பலம் எனப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில். இக்கோவிலில் ஆனி மாதத்தில்* *ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழாவும் வெகுவிமர்சையாக நடைபெறும்.*
*சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே உற்சவராகவும் இருப்பதால், இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா டிசம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.*
*இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 21ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. பின்னர் பல்வேறு பூஜைகளுக்கு பின் சாமி வீதி உலா நடைபெறும்.*
*10 நாள் நிகழ்ச்சிகள் 😘
*22ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெள்ளி சந்திர பிரபை வாகனத்திலும்.*
*23ஆம் தேதி (புதன்கிழமை) தங்க சூரிய பிரபை வாகனத்திலும்.*
*24ஆம் தேதி (வியாழக்கிழமை) வெள்ளி பூத வாகனத்திலும்.*
*25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வெள்ளி ரிஷப வாகனத்திலும்.*
*26ஆம் தேதி (சனிக்கிழமை) வெள்ளி யானை வாகனத்திலும்.*
*27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்க கைலாச வாகனத்திலும்,.*
*28ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை தங்க ரதத்தில் சாமி பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா வருகிறார்.*
*29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முக்கிய விழாவான தேர்த்திருவிழா நடக்கிறது.*
*அன்று அதிகாலை 5.30 மணி அளவில் கோவில் சித்சபையில் இருந்து மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தனித்தனி தேர்களில் வீதி உலா நடக்கிறது.*
*ஆருத்ரா தரிசனம் 😘
*டிசம்பர் 30ஆம் தேதி (புதன்கிழமை) அதிகாலை கோவில் ராஜ சபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இதனை தொடர்ந்து திருவாபரண அலங்காரமும், மதியம் 3 மணி அளவில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.*
*டிசம்பர் 31ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப் பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு கோவில் தீர்த்த குளமான ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.*