சின்முத்திரயை மார்போடு வைத்துள்ள இரண்டு கோஷ்ட தக்ஷிண மூர்த்திகள்

30

சிவபெருமானுக்கு, 64 வடிவங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவற்றுள் ஈசன் யோக நிலையில் இருக்கும் வடிவம், தக்ஷிணாமூர்த்தி. இவர் சின் முத்திரை காட்டியபடி யோகத்தில் அமர்ந்திருப்பார். சுண்டு விரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவை மடங்கி இருக்கும். சுட்டு விரல், பெருவிரலுடன் சேர்ந்திருக்கும்.

இதில் சுண்டு விரல் மனிதனின் ஆணவத்தைக் குறிக்கிறது. மோதிர விரல் மனிதனது செயல்களால் ஏற்படும் பாவ-புண்ணியங்களால் உண்டாகும் ‘கன்மம்’ என்ற குணத்தை சொல்கிறது. நடுவிரல் ‘மாயை’ என்னும் உலக வாழ்வு நிலையற்றது என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. சுட்டு விரல் மனிதனையும், பெருவிரல் இறைவனையும் குறிக்கிறது.

முதல் படம் 2017 ஆம் ஆண்டு இலம்பயன்கோட்டூர் ஸ்ரீ தெய்வநாதேஸ்வர ஸ்வாமி தர்ஸனத்தின் போது கோஷ்டத்தில் தர்ஸிக்கப்பெற்ற ஸ்ரீ யோக தக்ஷிண மூர்த்தி.
இரண்டாவது படம் இன்று ஆவணி மாதம் பூச திருநக்ஷத்திரத்தையொட்டி செருத்துணை நாயனார் அவதார பதியாகிய கீழ்தஞ்சை ஸ்ரீ ஆதிமூலேஸ்வர ஸ்வாமி கோஷ்டத்தில் தர்ஸிக்கப்பெற்ற ஸ்ரீ யோக தக்ஷிண மூர்த்தி இந்த இரண்டு தலங்களிலும் ஸ்வாமி சின்முத்திரயை மத்ய மண்டலத்தில் வைத்து உபதேசிக்கும் காட்சி இவ்வாலயத்தின் மற்றொரு சிறப்பு