ஐயப்பன் என்னென்ன நிலையில் இருப்பார் தெரியுமா?

270

ஐயப்பன் என்னென்ன நிலையில் இருப்பார் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில், ஐயப்பன் எந்தெந்த கோயில்களில் என்னென்ன நிலையில் இருப்பார் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

சாமியே சரணம் ஐயப்பா….

சுவாமி சரணம்…

  1. ஆரியங்காவில் மணந்த நிலையில் இளவயதாக துறந்த யோகத்தில் பகவான் இருக்கிறான்
  2. அச்சங்கோயிலில் வயோதிக நிலையில் காட்டரசனாக கொலுவிருக்கிறான்
  3. குழத்துபுழை சேத்திரத்தில் குழந்தை ரூபத்தில் காட்சி தருகிறான்.
  4. பந்தளத்தில் யுவராஜனாக குடும்ப நிலையில் பகவான் உள்ளான்.
  5. சபரிமலை பூங்காவனத்தில் நித்திய பிரம்மச்சாரியாக தவமிருக்கிறான்.
  6. பொன்னம்பல மேட்டில் இயற்கையோடு சூட்சுமமாக வடிவமின்றி சுற்றுகிறான்.
  7. எருமேலியில் வேட்டையாடும் குல வேடத்தில் வேட்டைகாரானாய் இருக்கிறான்.
  8. சொரிமுத்து ஐய்யானார் கோவிலில் ஆதி கிழவானாக அத்தனை சாஸ்தா ரூபங்களுக்கும் மூல ரூபமாக பாண்டி மலையாளத்தை ஆண்டுகொண்டிருக்கிறான்.
  9. இதில் சபரிமலை ஐய்யன் தொடங்கி அத்தனை தெய்வங்களும் வருடத்தின் ஒருமுறையாவது பூரண புஷ்கலா ரூபமாய் கிரகஸ்தனாய் காட்சி தந்து விடுகிறான்.

சுவாமியே சரணம் ஐயப்பா…