தூர்வாஷ்டமி இன்று ! இன்று தூர்வா எனப்படும் அருகம்புல்லை பூஜை செய்ய வேண்டும்.

382

பாத்ரபத (ஆவணி) மாஸ ஶுக்ல பக்ஷ அஷ்டமியை தூர்வாஷ்டமி என்பர்.
இன்று ஶுத்தமான இடத்தில் வளர்ந்து இருக்கும் அருகம்பில்லை யதாவிதியாக பூஜிக்க வேண்டும்.

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

அருகம்புல்லை ஒரு தாம்பாளத்தில் வைத்து
அருகம் புல்லுக்கு சந்தனம் குங்குமம் இட்டு கீழ்கண்ட ஶ்லோகம் சொல்லி நமஸ்கரித்து ப்ரார்த்தனை செய்து கொள்ளலாம்

त्वं दूर्वेऽमृत जन्मासि वन्दितासि सुरासुरैः। सौभाग्यं सन्ततिं देहि सर्वकार्यकरी भव ॥
यथा शाखाप्रशाखाभिर्विस्तृतासि महीतले ।
तथा ममापि सन्तानं देहि त्वमजरामरम् ॥

த்வம் தூர்வேऽம்ருத ஜந்மாஸி வந்திதாஸி ஸுராஸுரை: ।ஸௌபாக்யம் ஸந்ததிம் தேஹி ஸர்வகார்யகரீ பவ ॥
யதா ஶாகாப்ரஶாகாபி: விஸ்த்ருதாஸி மஹிதலே ।
ததா மமாபி ஸந்தாநம் தேஹி த்வமஜராமரம் ॥

ஹே அருகம்புல்லே நீ அம்ருதத்திலிருந்து உண்டானாய். தேவர்களாலும், அஸுரர் களாலும் வணங்க படுகிறாய்.எங்களுக்கு ஸெளபாக்கியத்தையும், குழந்தை செல்வத்தையும் தந்து அனைத்து
கார்யங்களிலும் வெற்றியடைய செய்.
எவ்வாறு நீ கிளை, உபகிளை என பரந்து விரிந்து பூமி முழுவதிலும் பரவுகின்றாயோ . அவ்வாறு எனது வம்சத்தையும் மகன், மகள்,பேரன், பேத்தி அவர்களுக்கு குழந்தை என விரிவடைய செய்வாயாக.

என்று ப்ரார்த்தனை செய்வதால் அருகம் புல் எப்படி பலகிளைகளுடன் உள்ளதோ அதேபோல் நமது வம்ஶமும் புத்ரன் பௌத்ரன் என வ்ருத்தி அடைந்து எல்லா ஸௌபாக்யங்களையும் பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடையும்.

வாழ்க வளமுடன்…