துவார பாலகர்கள் கதை

252

ஜயன், விஜயன்

ஜயன், விஜயன் ஆகிய இருவர் ஸ்ரீமஹாவிஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தின் வாயில் காவல்காரர்களாக இருந்தனர். இவர்களுக்குத் துவார பாலகர்கள் என்ற பெயர்.

ஒருநாள் தவவலிமை மிக்க சனகாதி (சனக, சனாதன, சனந்தன, சனத்குமார) முனிவர்கள் பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்ட வாசலுக்கு வந்தனர்.

அப்போது ஏகாந்தமாய் இருந்த மகாவிஷ்ணுவுக்குத் தொந்தரவாக இருக்குமோ என்று எண்ணிய துவாரபாலகர்கள்,

தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சனகாதி முனிவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதனால் சினமடைந்த முனிவர்கள் காவல்காரர்கள் இருவரும்,

தங்கள் வைகுண்டப் பதவியை இழந்து பூமியில் சாதாரண மனிதர்களாக ஏழு பிறவிகள் பூமியில் விஷ்ணு பக்தர்களாகப் பிறந்து பின் வைகுண்டத்தை அடைய வேண்டும் என்று சாபமிட்டனர்.

விஷ்ணுவை சந்தித்த முனிவர்கள், ஜெயன் மற்றும் விஜயனை சாபத்தில் இருந்து விடுவிக்குமாறு கேட்டனர்.

விஷ்ணுவோ, அவர்களை சாபத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியாது. இருப்பினும்

அதன் காலத்தை வேண்டுமானால் குறைத்துக் கொள்ள முடியும் என்றார்.

அதோடு அவர்களது சாபத்தின் காலத்தை 100 ஆயுர்காலத்தில் இருந்து 3 ஆயுர்காலமாக குறைத்தார்.

அதாவது, இவர்கள் இருவரும் மூன்று பிறவிகளிலும் அசுரர்களாக பிறவி எடுப்பார்களாம்.

முதல் பிறவி

இவர்களது முதல் பிறவி ஹிரன்யக்ஷா மற்றும் ஹிரன்யகசிபு ஆகும். இப்பிறவியில் இந்திரனின் பெருமையை அழிப்பவர்கள் என்று புகழ்பெற்றவர்கள்.

அதில் ஹிரன்யக்ஷா விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான பன்றி அவதாரத்தால் கொல்லப்பட்டார்,

அதே சமயம் ஹிரன்யகசிபு விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டார்.

 

இரண்டாம் பிறவி

இரண்டாவது பிறவியில் ராவணன் மற்றும் கும்பகர்ணனாக பிறவி எடுத்து, ராமரின் கையால் அழிவை சந்தித்தனர்.

 

கடைசி பிறவி

கடைசி பிறவியான மூன்றாம் பிறவியில், தந்தவர்கா (குந்தியின் சகோதரியின் மகன்) மற்றும் ஷிஷபாலாகா (கிருஷ்ணரின் சுதர்ஷன் சக்கரத்தால் தலை துண்டிக்கப்பட்டவர்) தோன்றினர்.

மூன்று பிறவியிலும், ராவணன் விஷ்ணுவின் கையால் அழிவை சந்தித்து,

சாப விமோட்சத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்