ஹரப்ரசாத் சாஸ்திரியை தெரியுமா?

189

ரவி சாஸ்திரியை தெரியும், ரவி மேஸ்திரியை கூட தெரியும் யார்? அது ஹரபிரசாத் சாஸ்திரி
6/12/1853 அன்று மேற்கு வங்கத்தில் பிறந்தவர் ஹரபிரசாத் சாஸ்திரி.

1898 ம் ஆண்டு சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்த புராண சமிஸ்கிருத சுவடியை நேப்பாலில் ஹரபிரசாத் சாஸ்திரி கண்டு பிடித்தார். கார்பன் டேட்டிங் முதலான ஆய்வுகள் லாம் செய்து அந்த சுவடி 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை உறுதி செய்தவர் இங்கிலாந்தில் உள்ள உலக புகழ்பெற்ற கேம்பிரிஜ் யூனிவர்சிட்டியில் அன்று பேராசிரியராக இருந்த Cecil Bendall.

ஹரபிரசாத் சாஸ்திரி மிகப்பெரிய சமிஸ்கிருத அறிஞர், வரலாற்று, தொல்பொருள் ஆய்வாளர், அன்றே சில சமுதாய சீர் திருத்தங்களை செய்தவர், மிகப்பெரிய சமுதாய சீர்திருத்த வாதியான ஈஸ்வர்சந்திர வித்யா சாகர் இவரின் நண்பர்.

ஹரபிரசாத் சாஸ்திரி அக்கால MA பட்டதாரி.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கந்த புராண சுவடிகளில் ஹரபிரசாத் சாஸ்திரி கண்டு பிடித்த சமிஸ்கிருத கந்த புராண சுவடி தான் மிக பழமையானது

வேத வியாசர் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சமிஸ்கிருதத்தில் எழுதிய ஸ்காந்த புராணத்தை தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழில் மொழி பெயர்த்தார்.

தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் தைப்பூசத்தை வட இந்தியர்கள் பௌஷ் பூர்ணிமாவாக கொண்டாடி சுப்ரமண்யனை ஆராதிக்கிறார்கள், துதிக்கிறார்கள்.

தைப்பூச திருநாளான இன்று 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்த புராண சுவடியை அரும்பாடுபட்டு கண்டு பிடித்து தந்த ஹர பிரசாத் ஷர்மாவை நாம் போற்றி தொழுவோம்.
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.