ஹோலிகா – இரணயனின் தங்கை

161

‘ஹோலிகா யாரை கட்டி அணைத்தாலும்
அவர்கள் பஸ்பமாகிவிடுவார்கள்,.!!
ஹோலிகா பிரகலாதனை தன் சகோதரன்
பொருட்டு அழிக்க முயல்கிறாள்.!!
தன் பக்தனுக்கு ஒரு துயர் நேருவதை
நாராயணன் பார்த்துக்கொண்டா இருப்பான் .!!
ஹோலிகா ஒருவனை கட்டிப் பிடித்து
பஸ்பமாக்கும்போது அவள் மேல்
போட்டிருக்கு சால்வை அவளை
காப்பாற்றும்.!!
ஹோலிகா பிரகலாதனை தன் மடியில்
அமர்த்தி கட்டிபிடிக்கும் போது
நாராயணன் தோன்றி காற்றினை ஏவ,
அது அவளது மேலுள்ள வஸ்த்திரத்தை
விக்கி பிரகலாதன் மேல் போட்டு அவனை காப்பாற்ற, ஹோலிகா பஸ்பமானாள்.!!
இதை வட இந்துயாவில்
” ஹோலிகா தகனம் ”
என்று கொண்டாடுவார்கள் .!!
அவளை நாராயணன் மாய்த்து பிரகலாதனை காத்ததை ,
ஹோலிகா தகனம் செய்வதை நம்மூர்
சொக்கப்பனை கொலுத்துவது போல்
கொளுத்தியும்,
பிரகலாதனை காப்பாற்றியதை
மகிழ்ச்சியுடன் , உற்சாகமாக கலர் பொடி
களையும்,
வண்ண நீரையும் இறைத்து
” ஹோலி பண்டிகை” யாக
கொண்டாடுகிறார்கள்.!!
ஹோலி வாழ்த்துக்கள் .!!