அம்மனுக்கு வியர்க்கும் அதிசயம்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்!

174
punnainallur mariamman temple history in tamil

அம்மனுக்கு வியர்க்கும் அதிசயம்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்!

புன்னைநல்லூர் மாரியம்மன் பற்றி 7 தகவல்கள் இப்போது தெரிந்து கொள்ளலாம்…

  1. தஞ்சையை அடுத்த புறநகர்ப் பகுதியாக உள்ளது புன்னைநல்லூர். இந்த திருத்தலத்தில் அம்பாள் மாரியம்மனாக புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருளாட்சி செய்கிறாள்.
  2. அம்மன் புற்று வடிவத்தினள் என்பதால் இங்கு அபிஷேகங்கள் நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக தைலக்காப்பு செய்யப்படுகிறது. அம்மணனுக்கு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடக்கிறது.
  3. அம்மை கண்டு அவதிப்படும் பக்தர்கள், கண் வியாதிகள் கொண்டவர்கள் இங்கு வந்து தங்கி குணம் அடைந்து செல்கிறார்கள்.
  4. சோழமன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது நகரைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் எட்டுவித தேவியரை காவல் தெய்வமாக வைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப்புறத்தில் உருவாக்கப்பட்ட தேவியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று ‘சோழசம்பு’ நூல் கூறுகிறது. அதுவே பின்னர் புற்று வடிவாக பிற்காலத்தில் தோன்றியது என்கிறார்கள்.
  5. தஞ்சாவூரை ஆண்ட அரசர்களுக்கும் ஆங்கிலேயே அதிகாரிகளுக்கும் பல சித்து விளையாட்டுகளை நிகழ்த்தி அவர்களின் குறை தீர்த்து அருள் செய்தவள் இந்த அம்மன்.
  6. சதாசிவ பிரம்மேந்திரர் உருவாக்கிய அம்மன்தான் இன்று வழிபாடு செய்யும் தெய்வசிலையாக உருவாகி உள்ளது என்கிறார்கள். சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம், குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கோரோஜனை, அகில், பலவித மூலிகை மருந்துகள் கொண்டு புற்று மண்ணில் பிசைந்து உருவானது என்று தலவரலாறு சொல்கிறது. பிரமேந்திரரே இங்குள்ள ஸ்ரீசக்ரத்தையும் பிரதிஷ்டை செய்தார்.
  7. கோடைப்பருவங்களில் முகம் வியர்க்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் இன்றுவரை அதிசயமாக பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். இன்றும் அம்மனின் திருமுகத்தினை அர்ச்சகர் துடைத்து அதில் உள்ள ஈரத்தை பக்தர்களுக்கு காண்பிக்கிறார். இதனால் அன்னை முத்து மாரியம்மன் என்றும் போற்றப்படுகிறாள்.