இன்று பெளமாஸ்வினி

352

பெளமாஸ்வினி அதாவது செவ்வாய்கிழமை அஸ்வினி நக்ஷத்ரம் கூடிய சுபதினத்தை தான் பெளமாஸ்வினி என்று பெரியோர்கள் தேவி வழிபாட்டை செய்தனர்.

அன்றைய தினத்தில் தேவியின் தோற்றத்தைப் பார்த்து வியந்த தேவர்கள், யார் நீ என்று கேட்பதாகவும், தேவி அதற்கு பதில் சொல்லும் விதமாக, தானே ப்ரும்ம ஸ்வரூபமாகவும், ப்ரக்ருதியாகவும், ஆனந்தமாகவும், விக்ஞானமாகவும், பஞ்சபூதங்களாகவும் இருப்பதாக சொல்கிறாள். அதேசமயம் , இவைகளுக்கு எதிர்மறையாக உள்ள அப்ரும்மம், அவிக்ஞானம், அபஞ்ச பூதமாக இருப்பதும் நானே என்று சொல்கிறாள்.

ருத்ர, வசுக்கள், ஆதித்ய, விஸ்வதேவர்களiன் தேஜஸ், மித்ர வருண, அக்னீ, அஸ்வினிகள் (இருவர்) – அதாவது தேவர்கள் அனைவரின் சக்தியும் நானே என்று சொல்லவும் தேவர்கள் அவளை வணங்கி

நமோ தேவ்யை, மகா தேவ்யை, சிவாயை ஸததம் நம : ||
நம: ப்ரக்ருத்யை பத்ராயை நியதா: ப்ரணதா : ஸ்ம தாம் ||

என்று துதிக்கிறார்கள்.

மகா தேவி உனக்கு நமஸ்காரம். தாயே,
எங்களை எப்பொழுதும் காப்பாற்றுவாயாக.அம்பிகே,
மகா கருணையே உருக் கொண்டவளான உன்னை பஜிக்கிறேன்.

அம்பிகையின் திருவடிகளில் சரணம் !