இந்த வாரம் என்ன விசேஷம்?

52

மார்ச் 6, சனி : அஷ்டமி. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்தில் திருவீதிவுலா. மன்னார்குடி ராசகோபால சுவாமி புறப்பாடு கண்டருளல்.
மார்ச் 7, ஞாயிறு : நவமி. மன்னார்குடி இராசகோபால சுவாமி கோவர்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். காளஹஸ்தி சிவபெருமான் பவனி. ஸ்ரீபெரும்புதூர் மணவாளமாமுனிவர் புறப்பாடு.
மார்ச் 8, திங்கள் : தசமி. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருக்கோர்ணம் சிவபெருமான் புறப்பாடு. ராமேஸ்வரம் சுவாமி.
அம்பாள் திருவீதிவுலா.
மார்ச் 9, செவ்வாய் : ஏகாதசி. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டப எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. குரங்கனி முத்துமாலையம்மன் பவனி. சர்வ ஏகாதசி.
மார்ச் 10, புதன் : துவாதசி. மன்னார்குடி ராசகோபால சுவாமி காலை பல்லக்கில் இரவு இராசாங்க அலங்கார காட்சி நகசு. பிரதோஷம். திருவோண விரதம்.
மார்ச் 11, வியாழன் : திரயோதசி. சகல சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் வெள்ளி ரதத்தில் பவனி. காளஹஸ்தி சிவபெருமான் ரிஷப சேவை. மூங்கிலனை காமாட்சி அம்மன் பெருந் திருவிழா.
மார்ச் 12, வெள்ளி : சதுர்த்தசி. மன்னார்குடி ராசகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராசாங்க அலங்காரம், ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் ரதோற்சவம். காளஹஸ்தி சிவபெருமான் ரதோற்சவம்