கண்ணீர் விட்டழுத கிருஷ்ணர்

226

மகாபாரத போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்ததை எண்ணி அர்ஜுனன் மிகவும் கண்ணீர் வடித்துக் கொண்டு இனி நான் என் உயிர் வாழ வேண்டும் என்று அழுதுகொண்டு இருந்தான்.அப்பொழுது அவன் தலையில் எதோ நீர்த்துளிகள் விழவே மேலே நோக்கி பார்த்தான்.

கீதையை உபதேசித்த கிருஷ்ணர் அங்கு அழுதுகொண்டு நின்றிருந்தார்.
அப்பொழுது அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து நான்தான் சாதாரண மனிதன் மரணம் இன்பம் துன்பம் போன்ற உலக நிலைகளில் இருந்து விடுபடாதவன் எனது மகனை இழந்ததால் அழுகிறேன்.

ஆனால் நீங்கள் தெய்வமாயிற்றே இதை எல்லாம் கடந்தவர் அல்லவா நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டான்.அதற்கு கிருஷ்ணர் இப்பொழுதுதான் உனக்கு பல மணிநேரம் செலவு செய்து கீதையை உபதேசம் பண்ணினேன்.உலகில் உள்ள எல்லாமே மாயை எதுவும் யாருக்கும் சொந்தமில்லை இன்று உன்னுடையதாக இருப்பது நாளை இன்னொருவருடையது ஆகும்.

எனவே எதற்காகவும் எந்த ஒரு இழப்பிற்காகவும் நாம் கண்ணீர் சிந்த வேண்டிய அவசியம் இல்லை என்று மிக சிரமபட்டு போதித்தே இவ்வளவு சீக்கிரத்தில் அது பயனற்று போய்விட்டதே. அனைத்தையும் நேரடியாக கேட்ட நீயே அதை உடனே மறந்துவிட்டு உன் மகனுக்காக இவ்வளவு கண்ணீர் வடிக்கிறாயே இந்த மனிதகுலத்தை எப்படி திருத்த என்பதை எண்ணித்தான் நான் அழுகிறேன் என்றார்.

நீதி ஆன்மாவிற்கு அழிவில்லை

உறவுகள் உணர்வுகள் அனைத்தும் மாயையே சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்