கூடியிருந்து குளிரும் கூடாரவல்லி உற்சவம்

29

மார்கழி மாத 27 ஆம் நாளே ” கூடாரவல்லி ” நாளாக, அழகான உற்சவமாக வைணவ ஸ்தலங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் முப்பது திருப்பாவை பாசுரங்களை அருளிச் செய்தவள்.
அதில் 27வது பாசுரமான ” கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப் ” பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம் ” எனும் பாசுரத்தை பாடியதும் #கண்ணன்_ஆண்டாளுக்கு #திருமணவரம்_தந்ததாக_ஐதீகம். கூடாரவல்லியன்று திருமால் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளையும், ஆண்டாளையும் தரிசிப்போருக்கு வாழ்வில் நல்வளங்கள் சேரும்.
27 ஆம் நாள் ” கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” எனும் பாடல் பாடி , ” மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் ” என்றபடி பெருமாளுக்கு நெய் நிறைந்த #அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
நோன்பு சமயத்தில் , ” நெய்யுண்ணோம் , பாலுண்ணோம், கண்களில் மையிடோம், மலரிட்டு முடியோம் என்று பெண்கள் இறைவனுக்காக அனைத்தையும் தவிர்த்து பணிகின்றார்கள்.
மார்கழி மாதம் ஆன 27ஆம் நாளில் விரதம் முடிகின்றார்கள்.
12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாராக விளங்கிய ஆண்டாள் அருளிய பாசுரங்கள் தமிழன்னைக்கு சூடாமணியாக விளங்குகின்றன.
ஶ்ரீஆண்டாள்_திருவடிகளே_சரணம்.
நா_ஊறும்_அக்கார_அடிசல்
பண்டிகை, திருவிழா என்றாலே இனிப்பு இல்லாமல் இருக்காது.
நெய், வெல்லம் சேர்த்து செய்த அக்கார அடிசல் எனப்படும் இனிப்பு வகை பண்டிகை நாட்களில் பிரசித்தம்.
நெய் சொட்டச் சொட்ட செய்யப்படும் இந்த இனிப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனை வீட்டில் செய்து பாருங்களேன்.
தேவையான பொருட்கள்:-
பாசுமதி அரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – ½ கப்
பால் – 750 மிலி
வெல்லம் – 2 கப்
முந்திரி,
திராட்சை – கால் கப்
ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன்
நெய் – 50 கிராம்
பச்சைக் கற்பூரம் – சிறிதளவு
செய்முறை:-
வெல்லத்தை தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டவும்.
பின்னர் சுத்தமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
அரிசி, பருப்பை இரண்டு முறை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
பாலை 1 கப் தண்ணீர் விட்டு காய்ச்சி பொங்கிவரும் போது அரிசியையும், பருப்பையும் போட்டு அடுப்பை சிம்மில் எரியவிடவும்.
நன்கு வெந்தபின் வெல்லப்பாகை ஊற்றி அதனுடன் கொஞ்சம் நெய்யை விட்டு அடி பிடிக்காமல் கிளறவும்.
லேசாக கெட்டியான பின் அதில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.
மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும்.
கடைசியில் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் பொடி தூவி நன்கு கிளறி இறக்கவும்.
“ஶ்ரீஆண்டாள்_திருவடிகளே_சரணம்”