மதுரை மீனாட்சி அம்மன் கிளி.

91

மதுரை மீனாட்சி அம்மனின் உருவத்தை நினைத்தாலே அவர் திருத்தோளில் இருக்கும் கிளியின் நினைவும் நமக்கு வந்து விடும். மீனாட்சி மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த நேரத்தில் பறக்க முடியாத ஒரு கிளி மீனாட்சியை எண்ணி அழுததாம்.
அகிலத்தையே காக்கும் அந்த அங்கயற்கண்ணி கிளியை தனது கரத்தில் தாங்கி எப்போதும் தன்னோடே இருக்குமாறு வைத்துக்கொண்டாள் என ஒரு கர்ண பரம்பரை கதை சொல்லப்படுகின்றது.
அதுமட்டுமல்ல, அன்னையை வேண்டி வணங்கும் பக்தர்களின் வேண்டுதல்களை மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொண்டு இந்த கிளி தான் அன்னையிடம் எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்குமாம்.
அதனால் தான் பக்தர்கள் அன்னை மீனாட்சியின் மீது மட்டுமல்ல, அவர் ஏந்திய அந்தக்கிளியின் மீதும் பக்தி கொண்டிருக்கிறார்கள்.. எனவே உங்கள் வேண்டுதல்களை எதற்கும் அந்த கிளியிடம் சொல்லி வையுங்கள். அந்த கிளி உங்கள் வேண்டுதல்களை சரியான நேரத்தில் அன்னை மீனாட்சியிடம் எடுத்து சொல்லி உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உதவும். ஆகையால் கிளியை மறக்காதீர்கள்.
ஸ்ரீ மாத்ரே நமஹ !!!