மகாபாரத அஸ்திரங்கள்

287

மகாபாரத_அஸ்திரங்கள்:

மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஆயுதங்களும், அஸ்திரங்களும் பெற்றிருந்தனர். அந்த ஆயுதங்களும், அஸ்திரங்களும் வலிமையுடையதாகவும், தனிப் பெருமை கொண்டதாகவும் இருந்தன. அதோடு தனித் தனி பெயர்களைக் கொண்டும் அழைக்கப்பட்டு வந்தன. இங்கே சிலரது ஆயுதங்கள், அஸ்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

* அர்ச்சுனனின் வில்லின் பெயர் ‘காண்டீபம்’.

* கிருஷ்ணர் வைத்திருக்கும் வில்லின் பெயர் சாரங்கம்’

* எய்தும் போது கல் மழையை பொழியும் அஸ்திரம் ‘பர்வதாஸ்திரம்’

* சகாதேவன் வைத்திருந்த புகழ்பெற்ற வாள் ‘கவுசிகீ’

* கிருஷ்ணர் வைத்திருக்கும் சக்கரத்தின் பெயர் ‘சுதர்சனம்’

* அர்ச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த ஆயுதம் ‘வஜ்ர_தத்தம்’

* சிவபெருமான் அர்ச்சுனனுக்கு கொடுத்த அஸ்திரம் ‘பாசுபதம்’

* கர்ணனை வதம் செய்ய அர்ச்சுனன் பயன்படுத்திய அம்பு ‘அஞ்சலிகம்’

* கடோத்கஜனை வதம் செய்ய கர்ணன் பிரயோகித்த சக்தி ‘வைஜயந்தி’

* குபேரன் அர்ச்சுனனுக்குக் கொடுத்த சிறந்த ஆயுதம் ‘அந்தர்தானம்’

* காண்டீபம் வில்லை அர்ச்சுனனுக்கு அளித்தவர் ‘வருணன்’

* திருமாலின் அவ தாரங்களில் ஒன்றான பரசுராமருக்கு போர் கருவியான கோடரியை அளித்தவர், சிவபெருமான்.

* அஷ்ட வசுக்களிடம் இருந்து பீஷ்மருக்குக் கிடைத்த சிறந்த ஆயுதம் ‘ப்ரஸ்வப்னாஸ்திரம்’