பிராட்டி ஶ்ரீ மஹாலக்ஷ்மீ எப்படி இருக்கிறாள்!?

212

உதயமாகி,அஸ்தமிக்காத சூர்யன் போல காட்சி தருபவளாம்!
துக்க சாகரத்தைப் போக்குபவள்!
மாறி மாறி பிறந்து அல்லல்படும் நம் சம்சாரத்தை போக்குபவள்!
எல்லாவற்றிற்கும் மேலாக மோக்ஷம் அடைய புருஷகாரம் செய்பவள்!….
….என்று ப்ரஹ்மாண்ட புராணம் சொல்கிறது!

“. ஸக்ருத் விபாதா ஸர்வார்த்தி ஸமுத்ரபரிஶோஷிணீ
பவபங்காபஹாரிணீ பரநிர்வாணதாயிணீ…”!

பிராட்டியின் திருநாமத்தைச் சொன்னாலே நமது துன்பக் கடல் வற்றிவிடும்!

பாஞ்சராத்ரம் சொல்கிறது!
“ லக்ஷ்மீ: புருஷகாரேண வல்லபா ப்ராப்தி யோகிநீ”….என்று!

எம்பெருமானே சொல்கிறானாம்!,,, என் வல்லபையான லக்ஷ்மீயே என்னையடைய புருஷகாரம் செய்கிறாள்!

உலகத்திற்கு ஈச்வரி!
எம்பெருமானுக்கு பத்னி.. அவனை அகலகில்லாமல் ஆச்ரித சம்ரக்ஷணம்! அப்படிப்பட்டவளைப் பற்றி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்!.என்று அஷ்டச்லோகியில் பராசர பட்டர் ஸாதித்து அருளினார்!
“ஈசாநாம்,ஜகதாமதீ ஶதயிதாம் நித்யாநபாயாம் ஶ்ரியம்…”

திருமகளார் தனிக்கேள்வன் பெருமையுடைய பிரானார்!..என்றபடி ,எம்பெருமானுக்கே இவளால்தான் பெருமை!

எம்பெருமானின் ஸ்வரூபமும்,ஸ்வாதந்த்ரியமும்,ஶ்ரீமஹாலக்ஷ்மீயின் ஆலிங்கனத்தாலே உண்டாகிறது!

அவனுக்கு அந்தரங்க விசேஷணமாக விளங்குபவள்!

பிராட்டியில்லாத அவதாரங்கள் ரஸிக்காது! அதனால்தான் ஒவ்வொரு அவதாரத்திலும் பிரிக்க முடியாமல் இருப்பவள்!

“ ஜகத் வ்யாப்தம் சராசரம் “. …என்று இந்த உலகமே விஷ்ணுவாலும், பிராட்டியாலும் வ்யாபிக்கப்பட்டுள்ளது என்று ஶ்ரீ விஷ்ணுபுராணம் சொல்கிறது!
எம்பெருமான் ஸ்வரூபம் இருக்கும் இடம் எல்லாவற்றிலும், இவளது ஸ்வரூபமும் இருக்கிறது!

பகவானின் மேலான சக்தியாக திகழ்பவள்!என்று ஸநத்குமார ஸம்ஹிதை கூறுகிறது!
அவளது திருநாமத்தைச்சொல்லி,,,அவளது திருவடிகளைப் பற்றுவோம்!!