மனோரஞ்சிதம் மாலை

94

மனோரஞ்சிதம் அரிதானது என்பதுடன், சுவாமி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.
பூக்களுக்கான கவர்ச்சியான வண்ணம் இல்லாவிட்டாலும், தன் ரம்மியமான மணத்தால், அனைவரையும் மயக்கும் அற்புதம் மனோரஞ்சிதம் மலருக்கு உண்டு.
மலர்களில் வாசம் அதிகம் கொண்டது மனோரஞ்சிதம். இந்த பூ நுகரும் போது, நாம் நினைக்கும் பழத்தின் வாசனை வரும் என்றும் கூறப்படுகிறது.
இலை போன்ற தோற்றத்தில் பச்சை வண்ணத்தில் பூத்து, பின், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு இந்த பூ மாற்றம் அடையும். பூக்கும் போது, இலையை போன்றே காணப்படும்.மாலை நேரத்தில் மட்டுமே பூக்கக்கூடியது இது.
மனோரஞ்சிதம் பூத்தால், 200 அடி சுற்றளவிற்கு பூவின் வாசம் இருக்கும்.மிகவும் அற்புதமான இதன் வாசம், மனதை மயங்கச் செய்யும். நீர் நிரப்பிய பாத்திரத்தில், ஒரு மனோரஞ்சிதம் பூவை வைத்தால், அந்த அறை முழுவதும் சுகந்தமான மணம் வீசும்.
இதன் மணத்திற்கு ஈடு இணையே கிடையாது. மனதை மயக்கும் என்பதாலும், மனதில் நினைக்கும் பழத்தின் வாசத்தை தரும்என்பதாலேயே, இது மனோரஞ்சிதம் என, அழைக்கப்படுவதாக தெரிகிறது.