மழை பொழிய வைக்கும் நந்தி

169

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்றவுடன், முதலில் இடது பக்கம் அமர்ந்துள்ள வீதிவிடங்க விநாயகரை வணங்க வேண்டும். பிரம்மநந்தி வீதிவிடங்கவிநாயகருக்கு பின்னால் உள்ளார்.
இவர் கண்கண்ட தெய்வம். மழை வேண்டி இவர் மீது நீர் நிரப்பினால், மழை கொட்டும் என்பது ஐதீகம். பசுக்கள் பால் கறக்காமல் இருந்தால், இவருக்கு அருகம்புல் சாற்றி, அதனை பசுவுக்கு கொடுத்தால் நன்றாக பால் கறக்கும் என்பர். தெற்கு பிரகாரத்தில் ஆகாச விநாயகர் அருள்பாலிக்கிறார். விநாயகரை வணங்கி விட்டு, மேற்கு நோக்கிச் சென்றால் துலாபார மண்டபம் உள்ளது. கோவிலின் வடக்கே கமலாம்பாள் சன்னதி உள்ளது.
இதேபோல, சண்முகர், சரஸ்வதி, பிரம்மலிங்கம், வசிட்ட லிங்கம், அத்திரி லிங்கம், பரத்வாஜலிங்கம், ரவுத்திர துர்க்கை ஆகியோர் திருவாரூர் தியாக ராஜர் கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விமானத்தின் கீழ் மூலஸ்தானம் இருக்க வேண்டும். ஆனால், தியாகேசர் உற்சவரானதால், சற்றுத்தள்ளி உள் மண்டபத்தில் உள்ளார். தீராத நோய், கடன் தொல்லை ஆகியவற்றை போக்க வல்லவர் ருணவிமோசனர்.