நற்பவி என்றால் என்ன?

228

நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்க பட்ட ஒரு மூல ஜப மந்திரம்.

இதன் பொருள் நற் – நல்லது, பவி – பவிக்கட்டும் / உண்டாகட்டும் என்பதே ஆகும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது. சுலபமாக தீங்குகள் ஒழிக்கப்பட இது அஸ்திரமாக இருந்து வரும்.

புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழிய பேரின்ப நிலையை அடைய நற்பவி பேருதவியாக இருக்கும் என மகிரிஷி காக புஜண்டர் அருளுகின்றார்.

நற்பவி! நற்பவி!! நற்பவி!!! என்று சொன்ன ஷணத்தில் இருந்து மகிரிஷி காக புஜண்டர் நம் குறைகளை போக்கி அருள்வார் என்பது அவர் வாக்காலயே அறிய படுகிறது.

ஸ்ரீ பகுளாதேவி சமேத ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷி வாழ்க!

நற்பவி நற்பவி நற்பவி.