பால் பிரண்டன்னும் , மஹா ஸ்வாமிகளும்

185

சிறிய நுழைவாயிலின் வழியே உள்ளே சென்று திறந்த வெளியான அறையில் சங்கராச்சாரியார் அமர்ந்திருந்த இடத்தை நெருங்கி மலர்களையும் பழங்களையும் காணிக்கையாக செலுத்தி அவரை
வணங்கினேன் .மெளனமாக அவரை பார்த்தவாறு இருந்தேன் . காவியுடை தரித்து சன்னியாசியின் அடையாளச் சின்னமாகிய கோலுடன் , குட்டையான உருவம் கொண்டிருந்தார் . அவரது நரைத்த முடியைக் கண்டு அவருக்கு நாற்பது வயதுதான் என அறிந்து வியப்புற்றேன் .

பழுப்பு நிறம் கொண்ட அவரது மேனியும்  இறைத்தன்மையும் , அபரிமிதமான சாந்தமும் , கருணை பொழியும் அவரது முகமும் என் வாழ்நாள் முழுதும் நினைவில் இருக்கும் . இவர் அபரிதமான புத்தி நுட்பமும் , மனோ சக்தியும் நிறைந்தவர் . என்னால் வெளியே கூற இயலாத
விவரிக்க முடியாத ” ஒன்று ” இந்த காந்தக் கண்களில் வெளிப்படுவதை மறுக்க இயலாது . பால் பிரண்டன் ; ஜகத்குருவே ! எத்தனை காலமாக இப்பட்டத்தை வகிக்கிறீர்கள் ? சங்கராச்சாரியார் ; எனது 12 வயதிலிருந்து .

பால் பிரண்டன் ;
யோகாவின் நுட்பமான உயர் நிலையைக் கற்று தெளிந்து நிருபிக்கக்கூடிய
குருவை எனக்கு காட்ட முடியுமா ? சங்கராச்சாரியார் ; தற்சமயம் நீங்கள் விரும்பியதை தரவல்ல இருவர் இந்தியாவில் உள்ளனர் . ஒருவர் காசியில் வாழும் மெய்ஞானி அவரை சந்திக்க எந்த அயல்நாட்டவருக்கும் அனுமதி இல்லை . மற்றொருவர் வட ஆற்காடுப்பகுதியிலுள்ள ” அருணாசலம்
” ஆன்மீக ஒளிவீசும் ” திருவண்ணாமலை ” அவரது உறைவிடம் அவர் ஒரு மகான் . தீர்க்கதரிசி . அவர்தான் ” மகரிஷி ” என அழைக்கப்படுபவர் . அவரை நான் ஒருமுறை சந்தித்து உள்ளேன் . ஆதலால் நீங்கள் அவரை நாடிச் செல்லலாம்.