இன்று, மார்கழித் திங்கள் ஐந்தாம் நாள். பெரியவா திருப்பாவை தொடர்கிறது.

46

மாயனை, மனிதனாயிங்கே மாமாயம் செய்தானை,
தூயனை, பாலாற்றங்கரை வந்தமர்ந்தானை,
காயம் கடந்தெங்கும் வியாபித்து நின்றானை,
சேயன் எனையாண்டு மலர்ப்பதமே தந்துவினை
ஓய அருளாசி தந்தானை, காமாக்ஷி
சேயனை, சீர்காஞ்சி நகர் சென்றவன் பெருமை
வாயினால் பாடி, மலர்தூவிக் கைதொழுவோம்
ஆய பயனும் அவன் பதமே! சரண் புகுந்தோம்! (5