ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம்

195

நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும்,பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் ‘ராம் ‘ என்றே நடக்கவேண்டும் .

எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே.’ கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

ராம நாம ‘ ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும் …..

ராம நாமா’ எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் ‘ராம நாமா’ சொல்ல மனம் மட்டும் போதும். இதைதான் “நா உண்டு, நாமா உண்டு” என்றனர் பெரியோர்கள் .

ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில் ராம நாம அதிர்வு பரவி,
உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்! !

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !