இராமாயணம் அது யாருக்குச் சொந்தம்

217

தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என்று மூன்று பிரிவனரும் அது தங்களுக்கேச் சொந்தம் என்று மோதிக் கொண்டனர்.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க சிவபெருமானிடம் சென்றனர்.

சிவபெருமான் பாகப்பிரிவினையைத் தொடங்கினார்.

கோடி சுலோகத்தில் தேவருக்கு 33 இலட்சம், அசுரருக்கு 33 இலட்சம், மனிதருக்கு 33 இலட்சம் என்று பிரித்துக் கொடுத்தார். மீதம் ஒரு இலட்சம் சுலோகங்கள் இருந்தன. அதையும் மூன்றாகப் பகிர்ந்து கொண்டிருந்த போது, ஒரு சுலோகம் மிஞ்சியது.

அந்த ஒரு சுலோகத்திற்கு 32 எழுத்துக்கள் அதையும் பத்து பத்தாகப் பிரித்துக் கொடுத்தார். கடைசியாக இரண்டு எழுத்துக்கள் மிஞ்சின.

அவை என்ன எழுத்துக்கள் தெரியுமா? ரா… மா…என்பவைதான்.

வழக்கைத் தீர்த்து வைத்ததற்காக இந்த ரா, மா எனும் எழுத்துக்கள் எனக்குச் சொந்தம் என்று கூறி எடுத்துக் கொண்டார்.

அட ராமா! என்கிறீர்களா?