சனிக்கிழமை பௌர்ணமி கிரிவலம்!

199

சனிக்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்! அவ்வாறு செல்வதால் நம்முடைய வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் !!!என்று சித்தர்கள் நமக்குஉபதேசமாகதெரிவித்துள்ளார்கள்

இன்று(08.02.2020) சனிக்கிழமைஅன்று மதியம் 3 மணி முதல்( 09 .02. 2020) ஞாயிறு மதியம் 1.10 வரை பௌர்ணமி திதி அமைந்திருக்கிறது .

இதில்( 08 .02. 2020)சனிக்கிழமை அன்று மதியம் 3 மணி முதல் மறுநாள் (09.02 .2020) ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயம் ஆகும் வரை உள்ள நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும். அப்படி செல்வதால் நம்முடைய வருமான அளவு நிச்சயமாக பல மடங்கு அதிகரிக்கும் .அண்ணாமலை கிரிவலம் செல்லும் பொழுது கூடுமானவரை பேசவே கூடாது.
ஏதாவது ஒரு சிவ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு கிரிவலம் செல்வது நன்று.

சிவசிவ என்பது ஒரு சிவமந்திரம்!!!

சிவாயநம என்பது ஒரு சிவமந்திரம்!!!

நமசிவாய என்பது ஒரு சிவ மந்திரம்!!!

ஓம் நமச்சிவாய என்பது ஒரு சிவமந்திரம் !!!

இதுதவிர ஏராளமான சிவமந்திரங்கள் இருக்கின்றன .பலர் சிவதீட்சை பெற்றிருப்பார்கள் .அவர்கள் தீட்சையின் போது உபதேசம் பெற்ற சிவ மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு செல்வது சிறப்பு!!!

கிரிவலம் செல்லும்போது அன்னதானம், ஆடை தானம் என்று ஏதாவது ஒரு தானம் செய்வது நன்று!!

கிரிவலப்பாதையில் இருக்கும் பைரவருக்கு உணவு தானம் செய்வதும் நன்று!

இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி அண்ணாமலை அருளைப் பெற்று மகத்தான செல்வந்தராக வாழ வாழ்த்துக்கள்!!!