ஸரஸ்வதி பூஜை ஸ்பெஷல் ! பெரியவா சரணம் !

175

சரஸ்வதியின் கையில் உள்ள ஏட்டுச் சுவடியும், ஜெப மாலையும் வித்தை, ஞானம் என்பதன் அடையாளங்கள்..
வித்தை என்னும் படிப்போடு கடவுளை அறியும் ஞானமும் நமக்கு வேண்டும் என்பது இதன் பொருள்..
மூன்றாம் பிறைக்கு கலைநிலா என்று பெயர்.. கலை என்றால் வளர்வது, சரஸ்வதி தலையில் மூன்றாம் பிறையைச் சூடியிருக்கிறாள்..
இதற்கு காரணம் கலைகள் இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்தவே..
வெண்தாமரை, வெண்ணிற அன்னம், ஸ்படிக மாலை, பிறைநிலா, வெள்ளை ஆடை ஆகியவற்றைக் கொண்ட கலைவாணியைத் தியானிப்பவர்களின் மனதில் தூய்மையும், அமைதியும் நிலைத்திருக்கும்…
மஹா பெரியவா அருளுரை !