ஷஷ்டி தினமான இன்று முருகப் பெருமானை வணங்கி இறையருள் பெறுவோமாக

31

ஆடும் அயில்வேல் அரசே
வந்தருள் செய் வடிவேலவா …
ஸ்ரீ வடிவேலழகனின் ஆயிரம் திருநாமங்கள் ….(461-470)
ஓம் துர்யாய நமஹ.
பொறுப்புடன் செயலாற்றுபவருக்கு நமஸ்காரம்.
ஓம் த்ருதவ்ரதாய நமஹ.
விரதத்தில் வசமாகுபவருக்கு நமஸ்காரம்.
ஓம் நித்யோத்ஸவாய நமஹ.
தினமும் கொண்டாடப்பட்டவருக்கு நமஸ்காரம்.
ஓம் நித்யத்ருப்தாய நமஹ.
எப்பொழுதும் திருப்தியுடன் இருப்பவருக்கு நமஸ்காரம்.
ஓம் நிர்லேபாய நமஹ.
பாவமற்றவருக்கு நமஸ்காரம்.
ஓம் நிச்சலாத்மகாய நமஹ.
அசைவற்ற நிலையான பரப் நமஸ்காரம்.
ஓம் நிரவத்யாய நமஹ.
அவச்சொல் அற்றவருக்கு நமஸ்காரம்.
ஓம் நிராதாராய நமஹ.
எல்லையில்லாதவருக்கு நமஸ்காரம்.
ஓம் நிஷ்களங்காய நமஹ.
களங்கமற்றவருக்கு நமஸ்காரம்.
ஓம் நிரஞ்சனாய நமஹ.
இருளற்றவருக்கு நமஸ்காரம்.
” நிறைமதி முகமெனு மொளியாலே” என்று அருணகிரி வர்ணிப்பதுபோல், பூர்ண சந்திரனைப்போல எப்போதும் பிரகாசிக்கும் திருமுகங்களையுடைய முருகனை நாடினால் நம் வாழ்வில் இருள் என்பதே இருக்காது.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !
வீரவேல் முருகனுக்கு அரோகரா !