சிவன் மீது சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி

82

திருக்காட்டுப்பள்ளி அருகே விஷ்ணம்பேட்டை கொள்ளிடக்கரையோரத்தில் கரும்பீஸ்வரர்(சிவன்) கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டும் தோறும் ஏப்ரல் மாதத்தில் 3 நாட்கள் சூரிய ஒளி சிவன் மீது விழும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு நேற்று காலை கரும்பீஸ்வரர் மீது சூரிய ஒளி விழுந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இ்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்