பகவான் சபரிகிரி நாதன் ஸ்ரீ தர்மசாஸ்தா இன்று தவக்கோல சொரூபமாக யோகநிலையில் ஐக்கியமாகிறார்..

69

மண்டல மகரவிளக்கு தீர்தாடன காலத்தின் புனித நிறைவு நாளான இன்று இரவு அத்தாழ பூஜை முடிந்து பகவான் சபரிகிரி நாதன் ஸ்ரீ தர்மசாஸ்தா இன்று தவக்கோல சொரூபமாக யோகநிலையில் ஐக்கியமாகிறார்..
மேலும் அந்நேரத்தில் பகவானின் திருமேனியில் ஏகமுக ருத்ராட்சம் அணிவித்து பஸ்மம் சாற்றி கிரீடம் தண்டம் முதலானவை அணிவிக்கப்பட்டு யோக பாப நிலையில் தவக்கோல ஸ்வரூபமாக ஜோதியில் ஐக்கியமாகிறார்…
லோகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஜீவன் நற்கதி அடைய பகவான் தவக்கோல ஸ்வரூபனாக யோகநிலையில் தியானிக்கிறார்…
மீண்டும் அடுத்த மாதம் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை சன்னிதானம் மீண்டும் திறக்கப்படும் என்பதனையும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்…
.!!!
சுவாமியே சரணம் ஐயப்பா..!!