தொட்டாற்சிணுங்கி

195

அகலிகை சாப விமோசனம்

அகலிகை கல்லாய் இருந்து ராமனின் காலடி பட்டு சாப விமோசனம் அடைந்தாள். அப்போது ராமன் கால் கட்டை விரலை பிடித்து இழுத்து ராமனை நிறுத்தியது ஒரு புல். கௌதமரை அழைக்க சொன்னது. ஏன் என்று ராமன் கேட்க… “மனைவி தவறு செய்தாள், சாபம் பெற்றாள். நான் என்ன குற்றம் செய்தேன், ஏன் இந்த கல்லாய் போன அகலிகையின் அடியில் மாட்டி இத்தனை வருடம் வளர்ச்சி இன்றி கிடக்கிறேன்? எனக்கு பதில் சொல்ல சொல்லு ராமாஎன்றது புல்..

உடனே ராமன்… “அன்று என்ன நடந்தது என்று உனக்கு தெரியுமா? சொல்என்றார். “இந்திரன் வந்து கோழி போல் கூவினான். விடிந்து விட்டது என்று கௌதமர் நீராட போனார். உடனே இந்திரன் கௌதமர் உருவில் மாறி, அகலிகையை அழைத்தான். அவளை அணைத்தான். அகலிகை புரியாது விழித்தாள். கௌதமன் சத்தம் கேட்டதும் இந்திரன் ஓடிவிட்டான். தொட்டது யார் என்று தெரியவில்லையா உனக்கு என்று கோவம் கொண்ட கௌதமன் அகலிகையை கல்லாய் போக சபித்தான்என்று சொல்லி முடித்தது புல்.

ராமன் சொன்னான் புல்லிடம்என் விரலை பிடித்து இழுக்க முடிந்த உன்னால் அன்று கௌதமனை நீராட போகாமல் தடுக்க முடியவில்லையா??
தவறான எண்ணம் கொண்ட இந்திரனை வீழ்த்த முடியவில்லையா??

உன் கண் முன் குற்றம் நடந்தும் பார்த்து மவுனமாய் இருந்ததுக்கான தண்டனை தான் இக்கோலம். என்னை போக விடுஎன்று அம்பால் நீக்கினார்.

புல் சுருங்கிற்று. அன்று முதல் இன்று வரை யார் தொட்டாலும் ராமனோ என்று எண்ணி வெட்கத்தால் குவியுமாம் தொட்டாற்சிணுங்கி

ராம ராம ராம சீதாராம்..