வெள்ளிக்கிழமை வைபவம் – அம்பாள் குறித்து ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

209

நிஸ்ஸீம மஹிமா_

“அம்பிகே! நீ ஸாக்ஷாத் ப்ரப்ரஹ்மத்தின்

பட்டமஹிஷியாயிருக்கிறாய்.

நீயே மஹாமாயையாக விச்வம் முழுதையும் த்வைத இழுபறியில் ப்ரமணம் பண்ணும்படியாக –- அதாவது, சுற்றிச் சுற்றி அலையும்படியாக –- செய்கிறாய்” என்கிறார் ஆதி ஆசார்யாள் (ஸெளந்தர்ய லஹரி ஸ்லோகத்தை பற்றிய வர்ணனை).

அதாவது அத்வைதத்தில் முக்யமாகச் சொன்ன மஹாமாயாவாகவே பராசக்தியை ‘ஐடிண்டிஃபை’ பண்ணி, [அத்வைத] வேதாந்தம் சாக்தம் இரண்டையும் ஸமரஸப்படுத்தி விடுகிறார்.

அந்த மாயையை “துரதிகம நிஸ்ஸீம மஹிமா” என்று சிறப்பிக்கும்போதோ சாக்த பாஷையில் சக்தியைப் போற்றிச் சொல்கிற முறையில் சொல்லியிருக்கிறார்.

‘துரதிகமம்’ என்றால் ‘அடைய முடியாதது’ என்று அர்த்தம். அதன் கட்டளையை யாரும் கடக்க முடியாது என்றும் அர்த்தம்.

*‘நிஸ்ஸீம மஹிமா’* என்றால் எல்லை கட்டமுடியாத அப்பேர்ப்பட்ட மஹிமை, பெருமை கொண்டது என்று அர்த்தம்.

அத்வைதத்தில் மாயையைத் ‘துச்சம்’ என்று தள்ளவே சொல்வார்.

அது இன்னவென்றே புரியாத புதிரான அநிர்வசநீயம் என்பார்.

இங்கே அதையே பராசக்தியாக இப்படியெல்லாம் கொண்டாடி அடைமொழிகள் போடுகிறார் [நம் ஆசார்யாள்]!

_லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்லோகம் 91 / நாமம் 429 – நிஸ்ஸீம மஹிமா – எல்லையில்லா மஹிமை வாய்ந்தவள்_

*பெரியவா சரணம்!*