வியப்பில் ஆழ்த்தும் மும்முக சிவ தரிசனம்!

167

ஸமிதேச்வர் மகாதேவ் திருக்கோயில், சித்தோர்கார் கோட்டை,ராஜஸ்தான்.
முதற்கண் சித்தோர்கார் கோட்டையையைப் பற்றி சிறிது அறிவோம்.
இந்தியாவின் மிகப்பெரிய கோட்டைகளுள் ஒன்று இந்த சித்தூர் கோட்டை ஆகும். மேலும் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. சித்தூர் கோட்டை மேவார் பகுதியின் சித்தோர்கார் மாவட்டத்தின் தலைமையிடமான சித்தோர்கார் நகரத்தில் அமைந்துள்ளது.மேவார் நாட்டின் தலைநகராகவும் சித்தூர் கோட்டை விளங்கியது
இந்த கோட்டை உயரத்திலிருந்து பார்க்கும்போது, மீனைப் போன்ற தோற்றத்தில் உள்ளது. பறவைகளின் கண்களுக்கு இது உண்மையான மீனின் தோற்றத்தை தரும் என்கிறார்கள்.
௭[7] ஆம் நூற்றாண்டு முதல் சூரிய குல இராசபுத்திர குகிலோத்தி மன்னர்களாலும், பின்னர் சிசோதியா குல மன்னர்களால், ௧௫௬௭ இல்[1567] அக்பர் சித்தூர் கோட்டை கைப்பற்றும் வரை ஆளப்பட்டது. ௧௮௦ [180] மீட்டர் உயரத்தில், ௨௮௦ [280]ஹெக்டர் பரப்பளவில், மலைப்பாங்கான இடத்தில் சித்தூர் கோட்டை அமைந்துள்ளது. இதனடியில் பெரோச் ஆறு பாய்கிறது. சிவாயநம