அதீதமான சக்தி படைத்த அகஸ்திய நட்சத்திரம்

0 139

  மிக மிக அதீதமான சக்தி படைத்த பிரபஞ்ச சக்தியையே தனக்குள் ஒடுக்கி ,சமநிலை படுத்தி ஆளக் கூடிய மிகப் பெரிய ஆற்றல் படைத்த யோகியாவார்.

 அகத்தியர் கடல் நீரை குடித்து, உள்ளே இருக்கும் ‘வாதாபி’ என்னும் அரக்கனை தனக்கு உணவாக்கி அழித்தார் என்று ஒரு தகவல் உள்ளது. இந்த கதைக்கு பின்னால் உண்மையில் நடந்தது என்ன? வாருங்கள் அந்த அறிவியல் உண்மையை உணர்ந்து கொள்ள.

 அகத்தியர் என்பவர் கும்பமுனி. ஜாதகரீதியாக சூரியன் சிம்மராசியில் இருந்து மறைந்து கும்பராசிக்கு உதயமாகும் நேரத்தில் வானில் ஒரு நட்சத்திரம் உதிக்கும். அந்த நட்சத்திரத்திற்கு வெளிநாட்டினர் வைத்துள்ள பெயர் ‘கானோபஸ்’ நட்சத்திரம் ஆனால் நம் இந்திய வானியல் சாஸ்திரத்தில் அதற்கு ‘அகஸ்திய நட்சத்திரம்’ என்று பெயர். தென் வானத்தில் பிரகாசிக்கும் இந்த நட்சத்திரம் அபூர்வ ஆற்றலோடு எப்பொழுதும் ஜொலித்துக் கொண்டிருக்கும். இதனுடைய ஒளி ஆண்டு என்பது எழுநூறு ஒளி ஆண்டுகள் ஆகும். இந்த ‘கானோபஸ்’ என்பதன் அர்த்தம் ‘குடம்’ என்பதாகும். இதனுடைய நிறம் ‘மஞ்சள்’ நிறமாகும். மிகப்பெரிய ஒளியைக் குடுக்கக்கூடிய நட்சத்திரமாக இந்த அகஸ்திய நட்சத்திரம் விளங்கும்.

  இதனுடைய காந்த அலைநீளம் 0.86. அகத்தியருடன் கூட இருக்கும் ஒரு நட்சத்திர தொகுப்பின் பெயர் ‘ஆர்கோ’ இதில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திர கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரம் தான் அகத்திய நட்சத்திரம் கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இது இருந்தாலும், கிட்டத்தட்ட சூரியனுக்கு நிகராக 13,600 மடங்கு ஒளியுடன் மற்ற நட்சத்திரங்களை விட ஜொலிக்கும். இதனுடைய பிரகாசம் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருப்பதால் நம்மால் பார்க்க முடிவதில்லை.

அதே நேரம் அகத்தியருக்கு அருகில் இருக்கக்கூடிய நட்சத்திரம் ‘டோராடஸ்’ இதற்கு தமிழில் ‘லோபமுத்ரா’ என்று பெயர். இதை ஐரோப்பிய நாட்டில் உள்ளவர்கள் பார்க்க முடியாது. இந்த நட்சத்திர பெயர்கள் விவரம் கிரேக்கம், இலத்தீன் போன்ற பழமை வாய்ந்த மொழி நாட்டவர்களுக்கு தெரிந்துள்ளது. ஆனால் இந்த விவரங்களை எல்லாம் நம் தமிழ் மொழியில் இருந்து தான் அவர்கள் ஆங்கிலத்தில் பெயர் சூட்டியுள்ளனர்.

  இதில் உள்ள முக்கியமான அறிவியல் உண்மை என்னவென்றால், இந்த அகஸ்திய நட்சத்திரம் பூமியை நோக்கி வரும் போது, கடல் நீர் பகுதி வற்ற ஆரம்பிக்கும். அதே போல் இந்த நட்சத்திரம் மிகவும் ஆகர்ஷனத்தோடு உதிக்கும் போது, இதன் கதிர்வீச்சால் ‘அகத்திப் பூ’ என்னும் பூ மலர ஆரம்பிக்கும். இது போல் நிறைய விஷயங்கள் அகஸ்திய நட்சத்திரம் பற்றி கூறி கொண்டே போகலாம். இந்த அகஸ்திய நட்சத்திரம் தமிழ் மாதம் புரட்டாசி 17 – 23 தேதிக்குள் உதிக்கும். சூரியன் ரோகிணி நட்சத்திரத்திற்கு போகும் போது, இந்த அகஸ்திய நட்சத்திரம் மறைந்து, மீண்டும் சூரியன் ஹஸ்த நட்சத்திரத்திற்கு வரும் போது நம் கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும். முக்கியமாக நான்கு மாத காலமாக சூரிய ஒளியால் அகஸ்திய நட்சத்திரம் நம் கண்களுக்கு மறைந்து விடும்.

 இந்த நட்சத்திரம் தோன்றும் போது, மழைக்காலம் முடிந்து, திரும்பவும் வெயில் காலம் ஆரம்பிக்கும். அப்போது கடல் நீர் வற்ற ஆரம்பிக்கும். ஆனால் நடக்கும் உண்மை என்னவென்றால் இந்த நட்சத்திரத்தின் ஆகர்ஷன சக்தியினால் கடல் நீரில் உள்ள உப்பின் தன்மை குறைய ஆரம்பித்து, வேகமாக வற்ற ஆரம்பிக்கும். இதைத்தான் மறைமுகமாக அகத்தியர் கடல் நீரை குடித்து, உள்ளே இருக்ககூடிய ‘வாதாபி’ என்னும் அரக்கனை அழித்தார் என்று கூறுகிறார்கள்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.