அகத்தியர்- ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!

0 2,897

அகத்தியர்- ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!

காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.

அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.

1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ‘தேவதாரு மரம்’.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் ‘திருத்தோடகன்’ என்னும் பொற்கொல்லரால் பிரத்தியேகமாக அகத்தியருக்காக செய்து கொடுக்கப்பட்டது.
3. அகத்தியர் அணிந்திருக்கும் பூணூலானது, விபூதி கலந்த ஒரு நிறத்தில் இருக்கும். இதன் பெயர் ‘திரிபூரணம்’ என்பதாகும். இது கௌதம முனிவரால் கொடுக்கப்பட்டது.
4. அகத்தியரும், லோபமுத்திரா அன்னையும் அணிந்திருக்கும் பூமாலையானது வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய 4 விதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையாகும். இந்த மாலையை தொடுத்துக் கொடுத்தவர் லோபமுத்ரா அன்னையின் தோழியான ‘பர்வதினி’ என்பவர்.
5. லோபமுத்ரா தேவியானவர் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மிகப் பெரிய சக்தி உபாசகி. அம்பாளின் மிகப் பெரிய சிஷ்யையாக லோபமுத்ரா தேவியைப் பற்றி ‘லலிதா திரிசதை’ யில் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் சிவப்பு நிற பட்டு உடுத்துவர். அதனால் சிவப்பு நிற பட்டு தான் லோபமுத்ரா அன்னைக்கு திருமண ஆடையாக நெய்யப்பட்டது.
7. லோபமுத்ரா அன்னை அம்பாளையே அடைய வேண்டி நின்றதால் ‘லோபா’ என்று பெயர் வந்தது. ‘முத்திரா’ என்றால் ஆனந்தத்தைப் பெற்றவள் என்று பொருள்.
8. லோபமுத்ரா அன்னை காலில் அணிந்திருக்கும் மெட்டியானது ‘சரளி’ எனப்படும் ஒரு அபூர்வ வகையான வைரக்கல்லால் ஆன அணிகலானாகும். இதைக் கொடுத்ததே அகத்தியர் தான்.
9.லோபமுத்ரா அன்னையின் அருகில் உள்ள மயிலானது, அவரது தோழியான ‘சேதத்தரணி’ என்பவராவார்.
10. அகத்தியர் அருகில் உள்ள மான், அவரின் முதன்மைச் சீடரான புலஸ்தியர் மகரிஷியே ஆவார்.
11. லோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கும் கிளியானது மிகவும் விசேஷமானது. அன்னையினால் கண்டறியப்பட்ட மகாவித்தை ஒன்று உண்டு. அது ‘ஹாதி வித்தை’. அந்த வித்தைக்குரிய தேவியே லோபமுத்திரை தான். அந்த வித்தையை உபாசனை செய்து யோகநிலையில் வந்த ஒரு பெண் தான் ‘மயூஷினி’. அவரே கிளி உருவத்தில் அமர்ந்திருக்கிறார்.
12. லோபமுத்ரா அன்னையின் கையில் உள்ளது ‘அமிர்தக்கலசம்’. இது பரமேஸ்வரனால் கொடுக்கப்பட்டது.
13. அன்னையின் கூந்தலில் ‘பொற்காந்தல்’ எனப்படும் ஒரு மலர் சூடியிருக்கிறார்கள்.

இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த இந்த அபூர்வ திருமணக் காட்சியானது பொதிகை மலையில் உள்ள வடகிழக்கு பகுதியில் இருக்கும் ‘பூமண் மேடு’ என்னும் இடத்தில் தான் நிகழ்ந்தது. இந்த அரிய நிகழ்வுகள் அனைத்தும் அகத்தியரின் தலைமைச் சித்தரான புலஸ்தியர் மகரிஷியால் கூறப்பட்டது.

photo

ஸ்ரீ அகத்தியர் சிறு குறிப்பு:

இவருக்கு பிடித்த பூ மல்லிப்பூ பிரசாதம் தயிர் சாதம் ஈம் என்ற பிஜட்சார மந்திரம் இவருடையது ஓம் அகத்திசாய நமஹ நாமம் சொன்னால் அருள் புரிவார்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.