அகத்தியருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் உபதேசித்த ஸ்தலம்

0 134

 திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாதர் திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பிகை திருத்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த தலம் இங்கு தான் அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார்.

 அகத்தியரும் ஒரு பவுர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து .லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது. இங்கு ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வரும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

 சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி ஆடிமாதத்தில் விரதம் இருந்துதான் இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசிக் தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும், தோஷங்கள் நிவர்த்தியாகும், மாங்கல்யத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.