ஐஷ்வர்யம் தரும் வலம்புரிச்சங்கு

0 1,716

 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் திருமகளும் வர மஹாவிஷ்ணு இடக்கையில் சங்கையும் வலக்கையில் தேவியையும் ஏற்றுக் கொண்டார். இதே போல் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்த சாந்திபனி முனிவருக்கு குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது குருவின் மனைவி, கண்ணீர் விட்டபடி பஞ்சஜனன் என்ற கடல் அரக்கன் அவர்களது ஒரே மகனைக் கடத்திக் கொண்டு போய்க் கடற்பாதாள அறையில் வைத்திருப்பதாகவும் குருதட்சணையாக அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினான்.

  கிருஷ்ணரும் பலராமரும் கடல் ராஜாவை அழைத்து வழிகேட்டுச் சென்று அரக்கனை எதிர்த்துப் போரிட்டுச் சாம்பலாக்கி விட்டு, குரு மகனை மீட்டுத் தந்தனர். பஞ்சஜனனின் சாம்பலே ஒன்று திரண்டு சங்காகியதால்-சங்கிற்குப் பாஞ்சஜன்யம் என்ற பெயர் ஏற்பட்டது. இதை வெற்றியின் சின்னமாகக் கிருஷ்ண பரமாத்மா கையில் எடுத்துக் கொண்டு ஊதத் தொடங்கினார், அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற பஞ்சபாண்டவர்களில் ஐவருமே ஒவ்வொரு விதமான சங்கை வைத்திருந்ததாக பாகவதம் கூறுகிறது.

 தருமருடைய சங்கு அனந்த விஜயம், அர்ஜுனனுடையது தேவதத்தம், பீமனுடையது மகாசங்கம். நகுலனுடையது சுகோஷம். மகாதேவனுடையது மணி புஷ்பகம். கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன. இவற்றில் வலம்புரி சங்குதான் மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகமமும், சாஸ்திரங்களும் சொல்வதைக் காணலாம். மேலே உள்ள இந்த சங்குகள் ஒவ்வொரு தெய்வத்தின் கரங்களில் இருப்பதாக விகனச ஆகமவிதியில் கூறப்பட்டுள்ளது. திருப்பதி பெருமாளுக்கு-மணி சங்கும், ரெங்கநாதருக்கு-துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு-பாருத சங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு- வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு-பார் சங்கும், சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலிய பெருமாளுக்கு- வெண் சங்கும், ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு-பூமா சங்கும் உள்ளன.

வலம்புரிச் சங்கை வழிபட்டால் நம்மைத்தேடி மகாலட்சுமி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை, முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடுகிறது. இதை

சங்க மத்யே ஸ்திதம் தோயம்ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்..

 என்ற வரிகளால் அறிந்து கொள்ளலாம். வாஸ்துக் குறை வீட்டில் காணப்பட்டால், மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்குவதாக ஐதீகம் இருக்கிறது. முற்காலங்களில் மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்ததற்குக் காரணம், வீடு கட்டும்போது ஐந்து வெள்ளிக் கிழமைகள் லக்ஷ்மி வஸ்ய பூஜை செய்த வலம்புரிச் சங்கை வீட்டு நிலை வாசற் படியில் வைத்து- நடு ஹாலில் சங்கு ஸ்தாபன பூஜை செய்து திருமகள் மற்றும் வாஸ்து பகவானை வழிபட்டார்கள். எந்தக் குறைவும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது.

 சங்கு பூஜை செய்யும் முறை: 48 நாள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலை உடற்சுத்தம் செய்துவிட்டு வலம் புரிச் சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்த பாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றியபின் ஓம் கம் கணேசாய நம ஸ்ரீ குருதேவாய நம என்ற பின்

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பாவ மானாய த்மஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்

 என்னும் சங்கு காயத்ரியை 3 முறை சொன்ன பிறகு-ஸ்வாகதம்… ஸ்வாகதம் ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும், பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரைப் போட வேண்டும், (வலம்புரிச் சங்கின் அளவைப் பொறுத்து தாமிரத் தட்டில் பச்சை அரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும். மூன்று முக நெய் தீபம் ஒன்று ஏற்றினால் போதும். பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும்.

WhatsApp Image 2017-11-16 at 22.52.09

ஓம் பத்ம நதியே நம
ஓம் சங்க நிதியே நம
ஓம் மகரநிதியே நம
ஓம் சுகச்சப நிதியே நம
ஓம் முகுந்த நிதியே நம
ஓம் குந்தாக்ய நிதியே நம
ஓம் நீல நிதியே நம
ஓம் மகநிதியே நம
ஓம் வரநிதியே நம
என்று நிதிகளை பூஜிக்க வேண்டும், மும்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

ஓம் யக்ஷசாய வித்மஹே
வைச்ரவ னாய த்மஹி
தந்நோ ஸ்ரீத ப்ரசோதயாத்.

பிறகு 16 நாமாவளி அர்ச்சனை செய்து (மஞ்சள் குங்குமத்தால் செய்வது மிக விசேஷமானது)

ஓம் க்லீம் குபேராய நம
ஓம் க்லீம் ஸ்ரீமதே நம
ஓம் க்லீம் பூர்ணாய நம
ஓம் க்லீம் அஸ்வாரூடாய நம
ஓம் க்லீம் நரவாகனாய நம
ஓம் க்லீம் சதா புஷ்பக வாகநாய நம
ஓம் க்லீம் யக்ஷõய நம
ஓம் க்லீம் நித்யேஸ்வராய நம
ஓம் க்லீம் நித்யானந்தாய நம
ஓம் க்லீம் தனலக்ஷ்மி வாஸாய நம
ஓம் க்லீம் அகாஸ்ரயாய நம
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய ரூபாய நம
ஓம் க்லீம் சர்வக்ஞாய நம
ஓம் க்லீம் சிவபூஜகாய நம
ஓம் க்லீம் ராஜயோக வராய நம

அர்ச்சனை முடிந்த பிறகு குபேர காயத்ரி சொன்ன பிறகு தூப தீபம் காட்டி ஓம் ஸ்ரீம் லக்ஷ்மி சகித குபேராய நம: மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு.. என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும். கற்கண்டு, பால், அவல் பாயாசம் நிவேதித்து நெய் தீபத்தை கற்பூர ஆரத்திக்குப் பதிலாகக் காட்ட வேண்டும், நமஸ்காரம் செய்த பிறகு.

ஓம் வட திசை வல்லவா போற்றி
ஓம் நவநிதி தேவா போற்றி
ஓம் செல்வத்தின் உருவமே போற்றி
ஓம் செல்வ வளம் சேர்ப்பாய் போற்றி
ஓம் திருமகளின் நட்பே போற்றி
ஓம் ஐஸ்வர்ய கடாட்சமே போற்றி
ஓம் ஆனந்தத்தின் தனமே போற்றி
ஓம் குபேர நாயக போற்றி

என்று நமஸ்காரம் செய்து ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தரவேண்டும்.

 எளிமையான இந்த குபேர பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் செழிக்கும். 6 வெள்ளிகள் கடன் தீர வழி ஏற்படும். வியாழக்கிழமை மாலை 5 முதல் 7.30 மணி வரை குபேர காலத்தில் செய்து 9ம் வியாழன் யக்ஞத்துடன் முடிக்க பொருள் சேர வழி உண்டு. 8 பவுர்ணமிகள் குபேர அர்ச்சனையுடன் எளிதாய்ச் செய்து வர செல்வம் சேர வாய்ப்பு உருவாகும்.

எளிதாகக் கடைப்பிடிக்க உகந்த மேலும் சில வழிமுறைகளை இப்போது காணலாம் ;

 ஆடி மாதம் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தன்றோ, புரட்டாசி மாதம் வரக்கூடிய பவுர்ணமியன்றோ, ஆனி மாதம் வரக்கூடிய வளர்பிறை அஷ்டமியன்றோ, அல்லது சித்திரை மாதம் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்றோ, அல்லது இவையனைத்து நாட்களிலுமோ, இரவில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு ஸ்ரீ மகாலட்சுமியின் மீது அமைந்த ஏதாவது ஒரு ஸ்துதியையோ, மந்திரத்தையோ சொல்லி அந்தத் திருமகளை எளிய முறையில் பூஜித்து வந்தால் கூடப் போதும், நம்முடைய குறைகள் யாவுமே மெல்ல மெல்ல விலகி வாழ்வில் வசந்தம் மலய மாருதமாய் வீசத் தொடங்கும்.

 சந்தான பாக்கியம் கிடைப்பது தாமதமாகும் காரணத்தால் மனம் கலங்கி நிற்கும் தம்பதிகளின் மனக்கவலை விலக அவர்கள், வலம்புரிச் சங்கின் வாயிலாகக் குரு பகவானைத் துதி செய்தால், சந்தான லட்சுமியின் அருளால், சந்தான பாக்கியத்தைப் பெற்று நிறை வாழ்வு எய்தலாம். அதாவது பஞ்சமி திதிகளில் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வலம்புரிச் சங்கில் சிறிது தேன் கலந்த பசும்பாலை வைத்து குருவின் ஸ்துதியை 48 முறை உச்சாடனம் செய்து, அந்தத் தேன் கலந்த பசும்பாலை கணவன், மனைவி இருவரும் பிரசாதமாக அருந்தி வந்தால் எண்ணிய எண்ணம் ஈடேறுவதோடு, மனக்குறைகள் யாவுமே மாயமாய் மறைந்து விடும் என்பது திண்ணம்.

 ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் அமையப் பெற்றவர்கள் அந்த தோஷத்தின் வலிமை நிலைகளுக்கேற்றவாறு வலம்புரிச் சங்கு பூஜையைக் குறிப்பிட்ட காலத்திற்குச் செய்து வந்தால் தோஷ நிவர்த்தி அடையப் பெறலாம்.

 அனைத்துத் தோஷங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒரு விசேஷமான வழிமுறையை இப்போது நாம் காணலாம். ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ, அல்லது அவரவரது ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ மாலையில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 27 செவ்வாய்க்கிழமைகள் கணக்கு. அவ்வாறு 27 செவ்வாய்க்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு அதை சுப்பிரமணியரின் திருவுருவத்தின் முன்பு வைத்து, அவரது மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை உச்சாடனம் செய்து, தூப தீப ஆராதனைகளுக்குப் பிறகு அந்தப் பசும் பாலை அவர்கள் மட்டும் அருந்திப் பூஜையை நிறைவு செய்யலாம். அன்று இரவு மட்டும் பால், பழம் அருந்தி விரதமிருக்க வேண்டும். இந்தக் கட்டுரையில் நாம் கண்ட வழிபாட்டு முறைகளைப்போல், வலம்புரிச் சங்கை வைத்து நாம் செய்யக்கூடிய மந்திர வழிபாட்டு முறைகள் இன்னும் நிறைய நடைமுறையில் இருக்கின்றன.

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.