அட்சய திரிதியையின் சிறப்புகள்

0 17

அக்ஷய திரிதியை ஸ்பெஷல் !

 தேவிபாகவதம் 9வது ஸ்கந்தம் 42வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த மஹாலக்ஷ்மி துதியை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் செல்வ வளம் கொழிக்கும். குறிப்பாக அக்ஷயத்ருதியை நாளில் இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வது திருமகளின் திருவருளுக்குப் பாத்திரமாக்கும்.

நம:

கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம:

கிருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

தாமரைப் பூவில் வசிக்கின்ற ஸ்ரீ மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். ஸ்ரீ நாராயணன் மனைவியே நமஸ்காரம். ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பிரியமானவளே நமஸ்காரம்.

பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:

பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம:

 தாமரை இதழ் போன்ற அகன்ற கண்களுடையவளும் தாமரை போன்ற முகமுடையவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். தாமரைப் பூவை ஆசனமாகக் கொண்டவளே, கையில் தாமரையைத் தரித்திருப்பவளே, விஷ்ணு பத்தினியே, மஹாலக்ஷ்மியே, நமஸ்காரம்.

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யை ஸர்வாராத்யை நமோ நம:

ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷதாத்ர்யை நமோ நம:

 சகல சம்பத்துகளின் வடிவாக இருப்பவளும் அனைவராலும் ஆராதிக்கத் தகுந்தவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம். விஷ்ணுவிடத்தில் எங்கள் பக்தியைக் கொண்டு சேர்ப்பவளும் சந்தோஷத்தை அளிப்பவளுமான மஹாலக்ஷ்மியே நமஸ்காரம்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.