சித்தர்கள் இன்றும் வாழும் இலங்கை அம்மன் கோவில். சூர்ப்பனகையின் தலை வந்து விழுந்த இடம் இதுவே!

0 474

சித்தர்கள் இன்றும் வாழும் உலைவாயன் மலை!

இராசிபுரம் வட்டம் கூனவேலம்பட்டி கிராமத்தில் தான் இந்த அதிசயக் கோவில் அமைந்துள்ளது. இலங்கையின் வேந்தன் இராவணனின் தங்கை சூர்ப்பனகை, இலட்சுமனரால் துண்டிக்கப்பட்ட சூர்ப்பனகையின் தலை இங்கே விழுந்ததாம். அந்த இடத்தில் இலங்கை அம்மன் கோவில் உருவானது. 

சித்தர்மலை போகர் மலை என பல இந்த ஆலவாய் மலையை சுற்றி அமைந்துள்ளது,மேலும் மலையில் பல சித்தர்களின் கோவில்கள் உள்ளன. சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகளூர் கேட் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

போகர் இங்கேதான் பழனி முருகனை செய்துள்ளார்:

போகரின் சிஷ்யர் கொங்கனவர் இந்த மலையில் உள்ள சுனையின் நீரை பெரும் கொப்பரையில் காய்ச்ச , போகர் தக்க பக்குவத்தோடு அனைத்து மூலிகைகளையும் பதம் பார்த்து சேர்த்து, மூலிகை பாஷாணங்கள் இறுகிய பின் பழனி முருகனை உருவாக்கினார் என செய்தி. 

நவபாஷாணம் செய்ய உலை வைக்கப்பட்டதால், இவ்விடம் உலைவாயன் மலை எனவும் குறிப்பிடப்படுகின்றதாம். பாஷாணம் காய்ச்ச வழிகாட்டிய காகமான காகபுஜண்டர் இங்கு தங்கி பல சித்துகள் புரிந்து வந்ததாக கர்ணபரம்பரைக் கதைகள் உண்டு.

இந்த மலையில் அபூர்வ மூலிகைகள் உண்டு. காகபுஜண்டரை வணங்கி எந்த மூலிகை தேவை என்று தேட ஆரம்பிக்கிறோமோ அந்த மூலிகை கண்டிப்பாய் கிடைக்கும் என நாட்டு வைத்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற மலை இது. மூலிகைகள் மட்டுமல்ல, வேண்டியதும் கிடைக்கிறது என்பார்கள் பூசாரிகள்.

அமாவாசை, பௌர்ணமி என அமானுஷ்ய விஷயங்களுக்கு தோதான நாட்களிலும் கார்த்திகை மாத சோமவாரங்களும், பங்குனி ஆயில்யம் எனப்படும் காகபுஜண்டரின் பிறந்த நாள் ஆகிய நாட்களுக்கு மட்டுமே  மனித நடமாட்டம் உள்ள நாட்கள். மற்றபடி நாம் வேண்டிக் கேட்டால், பூசாரி வந்து பூசைகள் நடத்தி வைப்பார். மொத்தத்தில் பழமை மாறாத ஒரு சித்த பூமி இது.

கோயிலின் உள்ளே ஒரு கர்ப்பக் கிரகத்தில் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் காகபுஜண்டரின் சிலையும், அதனருகில் அவர் பூஜித்த சிவலிங்கம் அமைந்துள்ளது.

சித்தர்கள் பலரும் இங்கே நடமாடும் அதிசயம் இன்றும் நம்மை மெய்சிலுர்க்க வெய்கின்றது, இதை படிப்பதை விட நேரில் சென்று பார்த்தல் தான் உண்மை விளங்கும்.

அமானுஷ்யம் என்பது படித்து புரிவதல்ல, உணர்ந்தும் கண்டும் அனுபவிக்க வேண்டியது!

நன்றி 

மித்திரன்
அமானுஷ்யத்தை தேடி….

.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.