அதிர்ஷ்டகரமாக வீடு வாய்ப்பு கூடி வரும், கடினமாக உழைப்பீர்கள்!

48

அதிர்ஷ்டகரமாக வீடு வாய்ப்பு கூடி வரும், கடினமாக உழைப்பீர்கள்!

மே 22 ஆம் தேதியான இன்றைய (22-05-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: நேர்மறை எண்ணங்கள் தேவை. தன லாபம் கூடும். நண்பர்கள் உதவி செய்வார்கள். தொழில் போட்டி எல்லாம் மறையும். உணவு விற்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. கேளிக்கை, பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபாடு கூடும்.

ரிஷபம்: நல்ல முடிவு எடுக்கும் நல்ல நாள். வாதம் தொடர்பான வலி இருக்கும். சரியான உடற்பயிற்சி தேவை. சிறுதூர பயணங்களினால் வெற்றி உண்டு. பணத்தை சேமிக்க வேண்டும்.

மிதுனம்: பொறுமையாக இருக்க வேண்டிய நாள். கோபம் கூடாது. யாரையும் விமர்சிக்க கூடாது. குடும்ப உறவுகளை, பேச்சினால் இழக்க நேரிடும். உடல் நலனில் அக்கறை தேவை. பண வரவு நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் கூடும். நரம்பு தொடர்பான பிரச்சனை கூடும்.

கடகம்: காலையில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மாலையில் எதையும் தவிர்க்க வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது. வியாபார முன்னேற்றம் அருமையாக இருக்கும்.

சிம்மம்: அதிர்ஷ்டமான நாள். நல்ல வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் சிபாரிசு தேடலாம். கடனுதவிக்காக அலைவீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.

கன்னி: மிக மிக நல்ல நாள். ஏராளமான நன்மைகள் தேடி வரும் நாள். வெளியூர் பயணம் சென்று தாய் தந்தையை பார்ப்பீர்கள். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். காதல் வயப்படும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிக மிக நல்ல நாள். கல்யாணம் தொடர்பான நல்ல சம்பந்தங்கள் தேடி வரும். கணவன் மனைவி பிரச்சனை தீரும். விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: மிக மிக நல்ல நாள். மன தைரியம் அதிகரிக்கும். பயணங்களினால் வெற்றி உண்டு. சொத்து, உயில் எழுதி வைக்க ஏற்ற நாள். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

தனுசு: தைரியமான நாள். அதிர்ஷ்டகரமாக வீடு வாய்ப்பு கூடி வரும். கடினமாக உழைப்பீர்கள். சோர்வின்றி செயல்படுவீர்கள். உறவுகள், நட்புகள் உரிமை பாராட்டக் கூடிய நல்ல நாள்.

மகரம்: மிகச்சிறந்த நல்ல நாள். அன்புக்குரியவர்களிடம் கடந்த காலம் பற்றி சொல்வீர்கள். அனுபவங்கள் நிறைந்த நாள். வெற்றிகரமான மனிதராக நீங்கள் விளங்குவீர்கள்.

கும்பம்: மாற்றங்கள் நிறைந்த நாள். வேலை மாற்றம் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வீர்கள். கடன் அடைபடும் யோகம் உண்டு. கல்யாணம் தொடர்பான விஷயங்கள் கூடி வரும். தொட்டது துலங்கும் அற்புதமான நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆடை, அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டு. பண வருமானம் கூடும். செலவும் அதிகரிக்கும்.

மீனம்: மிக மிக நல்ல நாள். யோகமான நாள். குரு வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் தங்களது பாதுகாப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். நெருங்கியவர்கள் பகையாக மாறுவார்கள். வியாபாரத்தில் தேவையான கடனுதவி கிடைக்கும்.