அந்தரங்க விஷயங்களில் தலையிடக் கூடாது!

66

அந்தரங்க விஷயங்களில் தலையிடக் கூடாது!

செப்டம்பர் 30 ஆம் தேதியான இன்றைய (30-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 30 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: உங்களுக்கு அனுகூலமான நாள். வீடு, மனை, வாங்கும் யோகம் உள்ள நாள். அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன லாபம் உண்டு. வேலை கிடைக்கும்.

கும்பம்: உடல் நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் பதற்றம் இருக்கும். தன லாபம் உண்டு. குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மகரம்: எண்ணிய காரியங்கள் விரைவாக முடியும். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். மனக்கசப்புகள் விலகும். முதலீடுகள் அதிகரிக்கும். கண் தொடர்பான பிரச்சனை வரும். கண் திருஷ்டி அதிகரிக்கும்.

தனுசு: வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். உயர் கல்வி வாய்ப்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் விஷயத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்: துன்பங்கள் நீங்க அம்பாள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். வியாபாரம் தொடர்பான நல்ல செய்தி வரும். கல்வி நிலை உயரும். உடல் நலனில் அக்கறை வேண்டும். கடன் உதவி கிடைக்கும்.

துலாம்: அருமையான நாள். எதிர்பார்க்கும் அனுகூல தகவல் வந்து சேரும். தொட்ட காரியங்கள் துலங்கும். தொண்டை பிரச்சனை வரும். தன லாபம் உண்டு. தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: நன்மைகள் அதிகம் நடைபெறும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆபரணச்சேர்க்கை உண்டு. மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் தலையிடக் கூடாது.

சிம்மம்: இனிய நாள். நன்மைகள் அதிகம் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி. பெண்களுக்கு பணியாற்றும் இடங்களில் உயர்வு கிட்டும்.

கடகம்: வியாபாரிகளுக்கு உயர்வுகள் வந்து சேரும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. நாவடக்கம் வேண்டும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும்.

மிதுனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும் நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேஷம்: அதிர்ஷ்டகரமான நாள். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டு. அரசு வேலைக்கு முயற்சிக்கலாம். புதிய வேலை வாய்ப்பு அமையும். பெண்களுக்கு சுப காரியங்கள் கூடி வரும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.