அன்பு ஜெயிக்கும்: இன்றைய (24-09-21) ராசி பலன்!

143

அன்பு ஜெயிக்கும்: இன்றைய (24-09-21) ராசி பலன்!

செப்டம்பர் 24 ஆம் தேதியான இன்றைய (24-09-2021) ராசி பலன்……

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 24 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: எண்ணிய எண்ணங்கள் வெற்றிகரமாக முடியும் நாள். அன்பாக பேசி, பழகினால், பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேர்வார்கள். வியாபார தொடர்புகள் விரிவடையும். மிகுந்த நன்மைகள் நடைபெறக் கூடிய ஒரு நாள். பிள்ளைகள் வளர்ப்பில் அக்கறை செலுத்தினால் அவர்களர்து வாழ்க்கையில் வெற்றியை அள்ளி தரும்.

கும்பம்: இனிய நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வெற்றிகரமான நாள். பெண்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும் நாள். வியாபாரிகள் யாரையும் நம்பி ஏமாந்து விடாதீர்கள். புதிய நபர்களை நம்ப வேண்டாம். ஞாபக மறதி வரும்.

மகரம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் ஒரு நாள். குடும்பத்தில் இருந்த பிரிவினைகள் விலகும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வளர்ப்பு பிராணிகளில் உடல் நலனில் கவனம் வேண்டும்.

தனுசு: இறைவனின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். குல தெய்வ அனுக்கிரகம் இருந்தால் தான் ஜெயிக்க முடியும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். வீடு, மனை கட்டும் யோகம் உண்டு. சகோதர்ர் வழியில் சொத்துப் பிரச்சனை இருப்பவர்கள், அது தீர பேச்சுவார்த்தை நடத்தலாம். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

துலாம்: தொட்டது துலங்கும் நாள். வேலை வாய்ப்பு அமையும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு வெளிநாட்டு தொடர்புகள் விரிவடையும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: அதிர்ஷ்டகரமான காலகட்டம். முன்னேறுவதற்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். வியாபாரிகளுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை நிம்மதியைத் தரும். நன்மைகள் ஏராளமாக நடைபெறும்.

சிம்மம்: எதையும் யோசித்து செய்ய வேண்டும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தன லாபம் உண்டு. ஏராளமான நல்ல செய்திகள் தேடி வரும்.

கடகம்: சந்தோஷமான அனுக்கிரகங்கள் நிறைந்த நல்லதொரு நாள். எதிரிகளை வென்று முடிப்பீர்கள். தன லாபம் உண்டு. ஞாபக மறதியால் துன்பங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.

மிதுனம்: வாழ்க்கையில் முன்னேற அனைத்து விஷயங்களையும் செய்யலாம். அலுவலகத்தில் புரோமோஷன், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் வரும். பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தங்க நகை வாங்கும் யோகம் உண்டு.

ரிஷபம்: திட்டங்கள் வெற்றி பெறும். சந்தோஷமான எண்ணங்கள் குடி கொள்ளும். எதிர்பார்க்கும் காரியங்கள், ஏராளமான நன்மைகளை கொடுக்கும். வம்பு, வழக்குகள் வைத்துக் கொள்ளக் கூடாது.

மேஷம்: உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். வியாபாரத்தில் நிதானமாக இருக்க வேண்டும். தன லாபம் உண்டு.

https://www.youtube.com/watch?v=2G4IkHT8rs8