அபிஷேகம் செய்வதை கண்ணால் பார்த்தால் நன்மை உண்டு!

112

அபிஷேகம் செய்வதை கண்ணால் பார்த்தால் நன்மை உண்டு!

செப்டம்பர் 13 ஆம் தேதியான இன்றைய (13-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 13 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: மிகுந்த நன்மைகள் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். சகோதர வழி உறவினர்களின் உடல் நலனில் அக்கறை வேண்டும்.

கும்பம்: ஏராளமான நன்மைகள் நடக்கும். வேலை வாய்ப்பு அமையும். திருமண வரன் அமையும். பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண செல்வுகள் அதிகமாக இருக்கும்.

மகரம்: நன்மைகள் அதிகம் நடக்கும் அற்புதமான நாள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம், சுய ஒழுக்கம் ஆகியவற்றிலும் எச்சரிக்கையும், கவனமும் வேண்டும். அபிஷேகங்களை கண்ணால் பார்த்தால் நன்மைகள் நடக்கும்.

தனுசு: வாழ்க்கையில் முன்னேற துடிப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு தேடி வரும். புதிய மாற்றங்கள் வரும். அதனை ஏற்றுக் கொள்வது நல்லது. பெண்களுக்கு தொட்ட காரியங்கள் துலங்கும். வியாபாரம் வெற்றிகரமாக இருக்கும்.

விருச்சிகம்: பதற்றம் இருக்கும். வயதில் பெரியவர்கள் தங்களது உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கோவப்பட்டு எதையும் பேசக் கூடாது. குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும்.

துலாம்: தன லாபம், தான்ய லாபம், குடும்ப நிம்மதி, எதிர்பார்க்கும் காரியங்களில் அனுகூலம், பெண்களுக்கு மகிழ்ச்சி, மகாலட்சியின் அனுக்கிரகம் என்று இருக்க கூடிய ஒரு அற்புதமான நாள். வெற்றிகள் குவியும். சில அவமானங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். அக்கம் பக்கத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். சிறுதூர பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. விநாயகரை வழிபட்டு ஆனந்தம் பெருகும் நாள்.

சிம்மம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் வருத்தமும், அவர்களது ஆதரவும் இருக்கும். நல்ல வேலை வாய்ப்பு அமையும். புது வேலை தேட வேண்டிய அவசியமும் வரும்.

கடகம்: தேவையான பல நன்மையான செய்திகள் வரும். வியாபாரத்தில் வளர்ச்சி, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளிடத்தில் அன்பு காட்ட வேண்டும். நீண்டகால பிரச்சனை முடிவுக்கு வரும்.

மிதுனம்: வேலையால் லாபம் வரும். வேலை பறிபோகும் நிலை கூட வரும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. லஞ்ச வழக்குகளில் சிக்கி அதனால் பெயர் இழக்கும் நிலை வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

ரிஷபம்: அருமையான நாள். வியாபார வெற்றிக்கு உழைத்தால் லாபம் பன்மடங்கு உயரும். குடும்ப நலனுக்காக எடுக்க கூடிய முடிவுகள் நன்மையாக முடியும். மாடி வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மேஷம்: எதையும் அவசப்பட்டு செய்யக்கூடாது. யோசித்து, நன்கு ஆராய்ந்து செய்ய வேண்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் வரும். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

https://www.youtube.com/watch?v=9du14UZnPIY