அப்பா, அம்மாவை மதிக்க வேண்டும்!

67

அப்பா, அம்மாவை மதிக்க வேண்டும்!

செப்டம்பர் 29 ஆம் தேதியான இன்றைய (29-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 29 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: இனிய நாள். தொட்ட காரியங்கள் துலங்கும் நாள். வெற்றிகரமான நாள். வியாபாரிகளுக்கு வெளிநாட்டு தொடர்பு உண்டாகும். கல்வி நிலை உயரும்.

கும்பம்: வெற்றிகரமான நாள். பிள்ளைகளின் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சி உண்டு. வண்டி, வாகனங்களில் கவனமாக சென்று வர வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. நல்ல தன வரவு உண்டு.

மகரம்: நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். எழுத்து, பேச்சுத்துறையில் இருப்பவர்கள் புகழ் அடைவீர்கள். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உயர் பதவிகள் உண்டு. திருமண வரன் அமையும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

தனுசு: ஏராளமான நன்மைகள் சூழல் கூடிய நல்லதொரு நாள். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதார தேவைகள் நிறைவடையும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: நிதானம், பொறுமை அவசியம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. அப்பா, அம்மாவை மதிக்க வேண்டும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். வியாபாரம் அருமையாக நடைபெறும். பல் வலி வருவதற்கு வாய்ப்பு உண்டு.

துலாம்: எதையும் சகித்துக் கொள்ளும் மனம் வேண்டும். யார் என்ன சொன்னாலும், அதையெல்லாம் பற்றி கவலைப்படக் கூடாது. பெண்களுக்கு அற்புதமான நாள். செய்யும் தொழிலில் வெற்றி உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்வு உண்டு. புதிய வியாபாரம் பற்றி யோசிப்பீர்கள். ஒரு சிலருக்கு அடி வயிற்றில் வலி இருக்கும்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: தொட்டது துலங்கும் அற்புதமான நாள். நல்ல வேலை வாய்ப்பு அமையும். நல்ல தன லாபம். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு உயர்வு கிடைக்கும். வம்பு, வழக்குகள் விலகும்.

சிம்மம்: வெற்றி வந்து குவியும். அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று எல்லோருக்கும் இந்த நாள் வெற்றிகரமான நாள். பொதுமக்களுக்கு எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கடகம்: இனிய நாள். நன்மைகள் அதிகளவில் நடைபெறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். திருமணம் தடைபட்டிருந்தால் திருமணம் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். மனக்குழப்பம் ஏற்படும். எந்த முடிவையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து எடுப்பது நல்லது.

மிதுனம்: நிதானமாக செயல்பட வேண்டும். பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். பதற்றம் இருக்கும். தன வரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தேக ஆரோக்கியம் உண்டாகும். பெண்களுக்கு அதிர்ஷ்டகரமான நாள். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

ரிஷபம்: எண்ணிய காரியங்கள் ஈடேறும் அற்புதமான நாள். தன லாபம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி. பிரிந்தவர்கள் மீண்டும் சேருதல். வியாபாரத்தில் புதிய வளர்ச்சி. பெண்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டு வாய்ப்புகள் கூடி வரும். அலுவலகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும்.

மேஷம்: அற்புதமான நாள். மன தைரியம் அதிகரிக்கும். கேட்ட வரங்களை இறைவன் வழங்குவார். ஒரு நல்ல சூழல் உண்டு. கோயிலுக்கு சென்று காலை, மாலை நேரங்களில் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும். வெற்றி பெறும் நாள். https://www.youtube.com/watch?v=5kyACdgsfjo