அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும்; அந்தரங்க ஆசைகள் நிறைவேறும்!

71

அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும்; அந்தரங்க ஆசைகள் நிறைவேறும்!

செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (12-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: வேலை மாற்றம் செய்யும் சூழல் வரும். வேலை வாய்ப்பு கிடைக்க தண்ணீர் தாகம் செய்ய வேண்டும். தாயாரது காலில் விழுந்து வணங்க எல்லா தடைகளும் நீங்கும். நோய், நொடிகள் சரியாகும். பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் முனைவோருக்கு ஏற்றமான நாள்.

ரிஷபம்: மன தைரியத்தால் வெற்றி உண்டு. அலுவலகத்தில் மற்றவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறுதூர பயணம் வெற்றி பெறும். சிவன், சனீஸ்வர பகவானை 3 பிரதட்சணம் செய்ய வேண்டும். நந்தி பகவானை வழிபட தாம்பத்திய பிரச்சனை சரியாகும். முயற்சிகள் பலிதமாகும். வியாபாரிகளுக்கு மிகச்சிறந்த நாள். மாணவர்களுக்கு கல்வியற்சி சிறப்பாக அமையும்.

மிதுனம்: உங்களைவிட்டுச் சென்றவர்கள் மீண்டும் வரக் கூடிய நாள். பிரச்சனைகளிலிருந்து மீண்டு வருவீர்கள். இறைவனுக்கு முடிக்காணிக்கை செலுத்த வேண்டும். திருப்பதி ஏழுமலையானுக்கு முடிக்காணிக்கை வழங்க வேண்டும். மன தைரியம் பெருகும். முயற்சிகள் வெற்றி பெறும். குறைகள் நிவர்த்தியாகும். தேவையான கடனுதவி கிடைக்கும்.

கடகம்: அருமையான நாள். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். முயற்சிகள் எல்லாம் பலிதமாகும். கல்யாண முயற்சி வெற்றி பெறும். திருவாசகம் படிக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி வரும். தொழில் முயற்சி வெற்றி பெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சிம்மம்: எதையும் பொறுமையாக செய்ய வேண்டும். எல்லா விஷயத்திலும் ஒரு வேகம் உண்டு. வீட்டிலுள்ளவர்களுடன் ஒரு மோதல் வரும். பொறுமையாக செயல்பட வேண்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் முயற்சி வெற்றி பெறும்.

கன்னி: வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசை வரும். சிலருக்கு ஆசை நிராசையாக தோன்றும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட வெற்றி உண்டாகும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும். வேலை மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுப காரிய தடை நீங்க ஸ்ரீ ராகவேந்திரரை வழிபட வேண்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தள்ளி போடலாம். வேலை மாற்றம் உண்டாகும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பெண்களுக்கு மிகச்சிறந்த வெற்றி உண்டாகும். ஆன்களுக்கு உடல் நலனில் அக்கறை தேவை. வேலை பார்க்கும் இடங்களில் பொறுமை தேவை. சிவனுக்கு அபிஷேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வியாதிகள் குணமாகும். திருமணத் தடை இருக்கும். வரன் அமைய கூடிய யோகம் வரும். பயணங்களால் வெற்றி உண்டாகும்.

விருச்சிகம்: பூர்வ, புண்ணிய அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடக்கும் நல்லதொரு நாள். பிஸினஸ் செய்ய வேண்டும் என்று ஆசை வரும். அன்பு பிள்ளைகளின் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். செய்யும் காரியங்கள் அனைத்தும் மிகச்சிறந்த நன்மை தரும்.

தனுசு: தன வருமானம் வரக் கூடிய நாள். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வளம் பெறுதல் எல்லாம் நடக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் கூடி வரும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

மகரம்: ஆசைகள் எல்லாம் நிறைவேறும் ஒரு அற்புதமான நாள். அந்தரங்க ஆசையாக இருந்தாலும், அன்பு கலந்த ஆசையாக இருந்தாலும் நிறைவேறும். தாழ்ந்தவர்கள் உயரக் கூடிய நாள். மனைவியின் உடல் நலனில் அக்கறை தேவை. அரசு அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை பாக்கியம் உண்டாகும்.

கும்பம்: தன வருமானம் வரும். நல்ல உத்தியோகம் உண்டாகும். பல்வேறு வகையான வெற்றிகள் வரும். நலம் தரும் நல்ல நாள்.

மீனம்: குல தெய்வத்தின் ஆசிர்வாதம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. கடனுதவி கிடைக்கும். எல்லா வகையிலும் வெற்றி உண்டாகும்.