அரசியலில் புகழ் பெறக் கூடிய யோகம் உண்டு!

73

அரசியலில் புகழ் பெறக் கூடிய யோகம் உண்டு!

செப்டம்பர் 20 ஆம் தேதியான இன்றைய (20-09-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (செப்டம்பர் 20 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மீனம் முதல் மேஷம் என்ற வரிசையில் இன்றைய நாளுக்கான ராசி பலன்களை பார்ப்போம்…

மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நன்மைகள் அதிகளவில் நடைபெறும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெற்றிகள் வந்து சேரும் அற்புதமான நாள்.

கும்பம்: வீடு, மனை, இடம் வாங்குவதில் எச்சரிக்கை தேவை. குடியிருக்கும் இடங்களில் சில கருத்து மாறுபாடுகள் வரும். தன லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பேச்சுவார்த்தையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகரம்: சந்தோஷமான அனுபவங்கள் நிறைந்த நாள். மன தைரியம் அதிகரிக்கும். தன லாபம் உண்டு. உடல் நிலையில் அக்கறை வேண்டும். அந்தரங்க விஷயங்களில் தலையிடக் கூடாது.

தனுசு: சகல காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். வேலை வாய்ப்பு அமையும். தன லாபம் உண்டு. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசியலில் புகழ் பெறுவீர்கள்.

விருச்சிகம்: நல்ல குடும்பம், மன மகிழ்ச்சியான நாள் என்று அமையும். குடும்பத்தில் பிள்ளைகளின் பிரச்சனைகளை பேசி தீர்த்து வைப்பீர்கள். தந்தை – மகன் உறவில் கருத்து வேறுபாடு உண்டு. தொட்டது துலங்கும் ஒரு நல்ல நாள்.

துலாம்: மன மகிழ்ச்சியான நாள். புதிய பதவிகள் கிடைக்கும். வேலை வாய்ப்பு அமையும். பெண்கள் தங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இடமாற்றம் உண்டு.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: மன மகிழ்ச்சியான நாள். நண்பர்களால் நல்ல செய்தி வந்து சேரும். தொட்ட காரியங்கள் துலங்கும். சகல காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வாழ்க்கையில் உயர்வதற்கு நல்ல சூழல் அமையும்.

சிம்மம்: கவனமாக இருக்க வேண்டும். மாலையில் மௌனமாக இருக்க வேண்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கல்வி நிலை உயரும்.

கடகம்: கஷ்டங்கள் தீர பிறருக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும். கண், காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் ஒரு சிலருக்கு இருக்கும். பதற்றம் இருக்கும். அளவான நன்மைகள் உண்டு. புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.

மிதுனம்: எடுக்கும் முயற்சிகள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தின் ரகசியங்கள் புலப்படும். நல்ல தன லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷபம்: நன்மை உண்டாகும். செயற்கரிய காரியங்கள் செய்து வெற்றி வாகை சூடுவீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன லாபம் உண்டு.

மேஷம்: நல்ல வேலை வாய்ப்பு அமையும். அரசு அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். லஞ்ச வழக்கில் சிக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மறு திருமணத்திற்கு ஏற்ற நாள். வியாபாரிகளுக்கு நன்மை உண்டாகும். பல் தொடர்பான பிரச்சனை வரும்.

https://www.youtube.com/watch?v=ha4LE-D1uXQ