அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் உண்டு!

62

அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் உண்டு!

நவம்பர் மாதம் 24 ஆம் தேதியான இன்றைய (24-11-2021) ராசி பலன்…

இன்றைய ராசி பலன் (நவம்பர் 24 ஆம் தேதி) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரிசையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: அருமையான நாள். பாக்கியமான நல்ல செய்தி வந்து சேரும் நாள். 2ஆவது திருமணம் செய்யக் கூடிய முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு தொடர்புடைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு குறித்த செய்தி நன்மை அளிக்கும். வியாபாரத்தில் செழிக்கும்.

ரிஷபம்: காரிய வெற்றிகள் உண்டாகும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. நண்பர்கள் வழியில் நல்ல உதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மன அழுத்தம் வந்து நிவர்த்தியாகும்.

மிதுனம்: புதிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார். தன லாபம் உருவாகும். இந்த நாளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். உடல் நலனில் அக்கறை வேண்டும்.

கடகம்: படபடப்பு, பதற்றம் இருக்கும். உடல் நலனில் அக்கறை வேண்டும். யார் மீதும் கோப படக் கூடாது. பொருளாதார விஷயத்தில் திடீர் செலவுகள் வரலாம். நண்பர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

சிம்மம்: வாழ்க்கையின் துன்பங்கள் விலகும். நிம்மதி உண்டாகும். பொருளாதார உயர்வு ஏற்படும். இனிய நாள். முயற்சிகள் வெற்றி பெறும். குடும்ப பொறுப்புகளை ஏற்று நடத்துவீர்கள். காது வலி பிரச்சனை வரலாம்.

மேலும் படிக்க: நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

கன்னி: சந்தோஷமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தொட்டதெல்லாம் வெற்றி. முதுகு தண்டுவட பிரச்சனை வரலாம்.

துலாம்: இது ஒரு அருமையான நாள். நல்ல வேலை வாய்ப்பு உருவாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு.

விருச்சிகம்: மன மகிழ்ச்சிக்காக பல விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பிறருக்கு உதவி செய்வீர்கள். வஸ்திரம் தானம் செய்தால் நன்மை உண்டாகும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.

தனுசு: நன்மைகள் அதிகம் நடைபெற மௌனமாக இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை வேண்டும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசு அதிகாரிகளுக்கு இடமாற்றம் உண்டாகும்.

மகரம்: இனிய நாள். தேவைகள் பூர்த்தியாகும். பயணங்களால் நன்மை, நல்ல வரவு, வியாபார வளர்ச்சி இருக்கும்.

கும்பம்: நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். வீட்டு பராமரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

மீனம்: நல்ல நாள். நீங்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும், தொட்ட காரியங்கள் துலங்கும். தன வருமானம் உயரும். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்கள்.