ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 மேஷம்!

114

ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 மேஷம்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் மேஷ ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசிப்பலன்… மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு விடிவு தெரியக்கூடிய அற்புதமான காலகட்டம். வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்கக் கூடிய சுழல் இப்போது உங்களுக்கு கணிந்து வரும். மேஷ ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் தற்போது பஞ்சமஸ்தானத்தில் இருக்கிறார். இந்த மாதம் முழுவதிலும் அவர் பஞ்சம ஸ்தானத்தில் அமரப் போகிறார். ராசி அதிபதி பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது பல நன்மைகளை செய்யும்.

முழுவதும் தெரிந்து கொள்ள: மேஷம் – ஆகஷ்ட் மாத ராசி பலன் 2021 – வீடியோ!

இந்த மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசியிலேயே சந்திர பகவான் அமர்ந்து மாதம் துவங்குகிறது. தன ஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார். சதுர்த்தம கேந்திரிய ஸ்தானத்தில் சூரிய பகவான் மற்றும் புதன் பகவான் சேர்த்திருக்கின்றனர். பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன். விருச்சிகத்திலே கேது பகவான், மகரத்திலே வக்ர சனி, கும்பத்திலே வக்ர குரு என்று இந்த மாதம் கிரக நிலைகள் அமைகிறது.

கடகத்தில் இருக்கக்கூடிய சூரிய பகவான் 6ஆம் தேதி சிம்மத்தில் பிரவேசம் செய்கிறார். பிறகு கன்னி ராசிக்கு சென்று உச்சம் அடையும் போது வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்கித் தரும். உதாரணமாக, சூரிய பகவான் சிம்ம ராசிக்கு பிரவேசம் செய்யப் போகிறார். சிம்மத்திலே இருக்கக் கூடிய சுக்ர பகவான் 13 ஆம் தேதி கன்னி ராசிக்குள் பிரவேசம் செய்வார். தன ஸ்தானதிபதியாக சுக்கிர பகவான் இந்த மாதத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அவர் அமர்ந்திருப்பது குடும்பத்தில் சுபச் செய்திகள் நடப்பதற்கான சூழலை உருவாக்கித் தரும்.

மகன் அல்லது மகளின் வாழ்க்கை தொடர்பான சுபச் செய்திகளுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமைந்திருக்கிறது. தன தேவைகள் பூர்த்தியாகும். வீட்டு பெண் குழந்தைகள் பூபெய்யக்கூடிய நல்ல சூழல். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் தற்போது விலகும் நேரம் வந்து விட்டது. அலுவலகங்களில் உயர் பதவி தேடி வரும்.

வியாபாரிகளுக்கு அடுத்தகட்ட உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். 24 ஆம் தேதிக்குப் பிறகு கடன் உதவிகள் கிடைக்கும். இளைஞர்களுக்கு மிகச் சிறப்பான வேலை வாய்ப்பு அமையும். குடும்ப பெண்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். சில சில சலசலப்புகள் வந்து செல்லும். உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலகட்டம். குழந்தை வரம் கிடைக்கும்.

வழிபாடு: கொப்புடைய அம்மனை வழிபாடு செய்து கொப்புடைய அம்மனே போற்றி என்று தினமும் 18 முறை சொல்லி வர நினைத்தது நிறைவேறும்.