இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் பொன்னான மாதம்!

350

இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பொன்னான மாதம்!

நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ரிஷபம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசிப்பலன்… இந்த மாதம் ஒரு அற்புதமான மாதம். வாழ்க்கையில் முன்னேற்றங்களை அள்ளித்தரும் மாதமாக இந்த மாதம் அமையப் போகிறது. எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். இந்த மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது ராகு பகவான் உங்க ராசியிலேயே இருக்கிறார்.

இங்கேயும் கிளிக் செய்யுங்கள்: மேஷம் ராசி: ஆகஸ்ட் மாதம் ராசி பலன் 2021 VIDEO

உங்களது திரிதியை ஸ்தானத்தில் சூரிய பகவானும், புதன் பகவானும் இருக்கிறார்கள். இதில், சூரிய பகவான் இந்த மாதம் 17 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் பிரவேசம் செய்கிறார். புதன் பகவான் 6 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். அதன் பிறகு 24ஆம் தேதி கன்னி ராசியில் உச்சம் அடைந்துவிடுவார். சுக்கிர பகவான் இந்த மாதம் 13 ஆம் தேதி கன்னி ராசிக்குள் சென்றுவிடுவார். இப்பொழுது செவ்வாய் பகவானும், சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். செவ்வாய் பகவான் மாதம் முழுவதும் சிம்மத்திலேயே இருப்பார்.

மேலும் படிக்க: தனுசு ராசி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021  VIDEO

உங்களுடைய சப்த ஸ்தானத்தில் கேது பகவானும், பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவானும், 10 ஆம் இடத்திலே குரு பகவானும் அமர்ந்திருக்கிறார்கள். ராசி அதிபதியாக சுக்கிர பகவான் சதுர்த்தம கேந்திரம் ஸ்தானத்தில் இருக்கிறார். பண வரவு அதிகரிக்கவும், சொத்து சுகம் பெருகுவதற்கும் ஏற்ற காலகட்டம். ஆடம்பர வாகனத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்.

இதையும் பார்க்க: ரிஷபம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 – வீடியோ!

சொத்து சுகம் வாங்கும் போது அளவு அறிந்து வாங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வாங்கி கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் போது கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வண்டி, வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாய்மைப் பெண்கள் பாதுகாப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வியாபாரத்திற்கு குல தெய்வ வழிபாடு சிறந்தது. வியாபாரம் பெருக குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். புதிய தொழில் அமைவதற்கான யோகம் இருக்கிறது. 24 ஆம் தேதிக்குப் பிறகு மிகப்பெரிய யோகம் தேடி வரும். உடல் நலக் கோளாறு நிவர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஞாபகத்திறன் அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரையின் பேரில் குடும்பம் முன்னேறும்.

வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இந்த மாதம் குரு பகவானின் அனுகிரகத்தால் நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். தினமும் குரு பகவானை வழிபட வேண்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் தொந்தரவுகளில் இருந்து விடுபடக்கூடிய நல்லதொரு மாதமாக அமையும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அதிகம் பகைத்துக் கொள்ளக் கூடாது. இந்த சூழலையெல்லாம் புரிந்து கொண்டு நடந்தால் போதும் இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.