இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சூட்சுமங்கள் புரியும்!

18

இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சூட்சுமங்கள் புரியும்!

ஜூலை 01 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (01-07-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: மிக அருமையான நாள். பெண்களின் மதிப்பு, மரியாதை கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மன தைரியம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வளர்ச்சிக்குரிய நாள்.

ரிஷபம்: மிக இனிய நாள். மகான்களின் வழிபாடு செய்ய வேண்டும். குடும்பத்தில் மங்களரமான நிகழ்ச்சி கூடி வரும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திடீர் உடம்பு வலி ஏற்படும்.

மிதுனம்: மிக இனிமையான நாள். பண வரவு அதிகரிக்கும். அனுகூலம் பெருகும். சாமர்த்தியம் அதிகரிக்கும்.

கடகம்: எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். மன சஞ்சனம் இருந்து கொண்டே இருக்கும். இது தீர அன்னதானம் செய்ய வேண்டும். இதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். பொருளாதார அபிவிருத்தி உண்டு. வியாபாரத்தில் அனுகூலமான செய்தி வரும்.

சிம்மம்: மிகச்சிறந்த முன்னேற்றம் உண்டு. சுப செய்திகள் கூடி வரும். மனதில் சந்தோஷம் நிலவும். நிறைய செலவு உண்டு.

கன்னி: மிக மிக நல்ல நாள். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. உடல் நல பாதிப்பு ஏற்படலாம். மறைமுக எதிரிகள் இருப்பார்கள். பதவி உயர்வு உண்டு. தாய்வழி உறவுகள் உதவி செய்வார்கள்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: மிக இனிமையான ஒரு நாள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டு. புதிய வியாபாரம் செய்வீர்கள். முயற்சிகள் செய்வீர்கள் வெற்றி பெறுவீர்கள். மிகுந்த நன்மைகள் ஆர்ப்பரிக்கும் ஒரு நாள்.

விருச்சிகம்: மிக மிக அற்புதமான நாள். யோகமான சூழல் உண்டு. நல்ல முன்னேற்றம் கை கூடி வரும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு வாய்ப்பு வசதிகள் பெருகும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை.

தனுசு: நல்லதொரு நாள். நிறைய நன்மைகள் தேடி வரும் ஒரு நாள். பண ரீதியாக நன்றாக இருக்கிறது. வாழ்க்கை சூட்சுமங்கள் புரியும். பயணங்களால் மாறுதல்களை சந்திப்பீர்கள்.

மகரம்: மனதில் மாற்றம் உண்டாகும். உடல் நலனில் கூடுதல் அக்கறை தேவை. புதிய வருமானங்களை எண்ணி திட்டமிடுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: நல்லதொரு நாள். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையாட்களும் கிடைப்பார்கள். மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். தோல் பிரச்சனை வரலாம். பிஸினஸ் முயற்சி வெற்றி பெறும். அனுகூலமான ஒரு நாள்.

மீனம்: ஏழுமலையான் வழிபாடு செய்ய வேண்டும். வாழ்க்கை தடை விலகும். கொழுப்புச் சத்து கூடும். நல்ல நல்ல செய்திகள் தேடி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.