இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம், எனினும் ஆபத்து இல்லை!

109
செல்வாக்கு, புகழ் உண்டாகும்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம், எனினும் ஆபத்து இல்லை!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… மார்ச் 13 ஆம் தேதியான இன்றைய (13-03-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: புதிய வேலை கிடைக்கும். பெண்களுக்கு சிறந்த நாள். தாய்மை பேறு கிடைக்கும். நினைத்த காரியம் வெற்றி பெறும். கல்வியில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்: அருமையான நாள். இன்னாள் பொன்னாள். மன தைரியம் அதிகரிக்கும். பயணம் வெற்றி தரும். வேலை கிடைக்கும். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல நாள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் இருக்கும்.

மிதுனம்: காசு, பணம், துட்டு வரக்கூடிய நாள். சுபச் செலவுகள் செய்யலாம். வியாபாரிகளுக்கு நல்ல நாள்.

கடகம்: மிகவும் நல்ல நாள். மனக் கஷ்டம் இருக்கும். திருஷ்டி இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் வாய்ப்புகள் உண்டு. குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

சிம்மம்: அருமையான காலகட்டம். பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும் நாள். பெண்கள் தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சுப செலவுகள் செய்தால் நல்லது.

கன்னி: மிக மிக சிறந்த நாள். மகிழ்ச்சியான நாள். தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி இருக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். வியாபாரத்தில் தேவையான கடனுதவி கிடைக்கும்.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: இன்னாள் பொன்னான ஒரு நாள். கல்வியில் முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதி, பொருளாதார ரீதியில் உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு செடிகள், பூக்கள் வளர்க்க ஆசை வரும்.

விருச்சிகம்: மகிழ்ச்சிக்குரிய நாள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிதாக வீடு கட்ட ஆசை வரும்.

தனுசு: இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம். தைரியமாக முயற்சி செய்ய வேண்டும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு.

மகரம்: சிறந்த ஒரு நாள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. திருமணம் குறித்து நல்ல செய்தி வரும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கும்பம்: குதூகலமான நாள். நல்ல வேலை வாய்ப்பிற்கான முயற்சி செய்தால் வெற்றி உண்டு. செல்வம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். இளைஞர்களுக்கு முன்னேற்றமான நாள். தொட்டது துலங்கும் நல்ல நாள். பெண்களுக்கு இதமான பதமான ஒரு நாள்.

மீனம்: மிக மிக மகிழ்ச்சியான நாள். சொத்து சுகம் வாங்கும் ஒரு காலகட்டம். அன்பு பிள்ளைகள் வாழ்க்கையில் ஜெயிக்கும் ஒரு காலகட்டம்.