இன்றைய நாளில் உங்களுக்கு கெடுதல், நல்லதாக முடியும்!

70

இன்றைய நாளில் உங்களுக்கு கெடுதல், நல்லதாக முடியும்!

ஆங்கில வருடப்பிறப்பு 2022 ஆம் ஆண்டு… ஜனவரி 27 ஆம் தேதியான இன்றைய (27-01-2022) ராசி பலன் – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்…

மேஷம்: வண்டி, வாகனங்களில் கவனம் வேண்டும். யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. தன வரவு கூடும். வியாபாரத்தில் அளவான நன்மை உண்டு.

ரிஷபம்: முன்னேற்றமான நாள். சுய ஒழுக்கத்தில் கவனம் வேண்டும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனை தீரும். கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

மிதுனம்: பொறுமையாக இருக்க வேண்டும். மனக் கலக்கம் கூடாது. வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தன வரவு உயரும்.

கடகம்: தாயாரது உடல் நலனில் கவனம் வேண்டும். போதை விஷயங்களை தவிர்ப்பது நல்லது. காது வலி பிரச்சனை இருக்கும். யாருக்கும் பொம்மலாட்ட்ட பொம்மையாக இருக்க கூடாது. உடல் நலனில் எச்சரிக்கை தேவை.

சிம்மம்: கல்விக்கடனுக்கு முயற்சி செய்வீர்கள். முக்கிய ஒப்பந்தங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கன்னி: முன்னேற்றகரமான நாள். சோதனைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். சிறு தூர பயணங்களில் பாதுகாப்பு தேவை. பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கூடாது.

மேலும் படிக்க: 12 ராசிகளுக்கான ராசி பலன் – வீடியோ தொகுப்பு!

துலாம்: பெண் தெய்வ வழிபாடு வெற்றி தரும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மூட்டு எலும்புகளில் பிரச்சனை வரலாம். திருமண விஷயங்கள் கை கூடி வரும்.

விருச்சிகம்: மஹான்களின் ஆசிர்வாதம் கிடைத்தால் வாழ்க்கையில் வெற்றி உண்டு. உடல் நல பாதிப்பு இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.

தனுசு: கெடுதல், நல்லதாக முடியும். இடமாற்றம் உண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. வரவுகள் கூடும்.

மகரம்: உடல் நலனில் கூடுதல் பாதுகாப்பு தேவை. உடற்பயிற்சி செய்ய வேண்டும். வரவுகள் கூடும். நடைபாதை வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டு.

கும்பம்: வீண் கவலைகள் கூடாது. வரவுகள் உயரும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். வெளிச்சமான வாழ்க்கை உருவாகும்.

மீனம்: ஏராளமான நன்மைகள் நடைபெறும். முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பல் வலி பிரச்சனை வரலாம்.